Mon ,Mar 04, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

இந்த தமிழ் புத்தாண்டில் மீன ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. | Tamil New Year Rasi Palan 2023 Meenam

Nandhinipriya Ganeshan Updated:
இந்த தமிழ் புத்தாண்டில் மீன ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. | Tamil New Year Rasi Palan 2023 MeenamRepresentative Image.

அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் மீன ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம். 

இந்த தமிழ் புத்தாண்டில் மீன ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. | Tamil New Year Rasi Palan 2023 MeenamRepresentative Image

மீனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2023:

இந்த தமிழ் புத்தாண்டு மீன ராசியினருக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகிறது. அதாவது, சில விஷயங்களில் நன்மைகளை கொடுத்தாலும், சில விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். இந்த ஆண்டின் முதல் பகுதி அதாவது அக்டோபர் மாதம் வரை அமோகமான நன்மைகள் நடைபெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம், பொருளாதாரம் மேம்படும், திருமண முயற்சி கைகூடி வரும், புதிய தொழில் தொடங்கும் யோகம், புதிய வீடு, மனை வாங்குதல் என அமோகமான பலன்களை அனுபவிப்பீர்கள்.

பணப்பிரச்சனைக்கு முடிவு வந்துவிட்டது. வரலட்சுமி உங்க வீடுத்தேடி வரப்போகிறாள். எனவே, முடிந்தவரை சேமித்து வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். கை நிறைய பணம் இருக்கின்றது என்பதற்காக ஆடம்பர செலவுகள் செய்தால், ஆண்டின் பிற்பகுதியில் ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். அதேபோல், புதிய வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்ய விரும்புவோர் தாராளமாக முயற்சிக்கலாம். 

இந்த தமிழ் புத்தாண்டில் மீன ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. | Tamil New Year Rasi Palan 2023 MeenamRepresentative Image

திருமண வயதில் இருக்கும் மீன ராசியினருக்கு திருமண யோகம் கைகூடி வரும். எனவே, சொந்தத்தை தவிர்த்து சொந்தமற்ற அதாவது அந்நியத்தில் பெண் அல்லது மாப்பிள்ளை பார்ப்பது மிக மிக சிறப்பு. மேலும், மற்றவர்களிடம் கொடுத்த வாக்கை சிரமப்பட்டு காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன சண்டை, சச்சரவுகள் வரும். அனுசரித்து நடந்துக்கொண்டால் பெரிய பிரச்சனை இருக்காது. கடன் தொல்லை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் எதிரிகள் குறைவார்கள். புத்திர பாக்கியம் உண்டு. 

இந்த தமிழ் புத்தாண்டில் மீன ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. | Tamil New Year Rasi Palan 2023 MeenamRepresentative Image

அதுவே ஆண்டின் பிற்பகுதியில்  அதாவது நவம்பர் மாதத்தில் இருந்து ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீண் செலவுகளால் பணம் கறையும். கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனைவரும் எனவே, உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சோம்பல் அதிகரிக்கும். தேவையில்லாத நட்பு வட்டாரங்களின் காரணமாக பழக்கவழக்கங்களில் மாறுதல் ஏற்படும். எனவே, சுதாரித்துக் கொள்ளுங்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்