Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Rasi Palan in Tamil: நீண்டநாள் கனவு நிறைவேறப் போகுது.. இந்த ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோகம் தான்... ஜூலை 01, 2022 ராசிபலன்! 

Nandhinipriya Ganeshan June 30, 2022 & 16:00 [IST]
Today Rasi Palan in Tamil: நீண்டநாள் கனவு நிறைவேறப் போகுது.. இந்த ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோகம் தான்... ஜூலை 01, 2022 ராசிபலன்! Representative Image.

Today Rasi Palan in Tamil | Tomorrow Rasi Palan in Tamil | Nalaiya Rasi Palan | Inraiya Raasi Palan | Tomorrow Horoscope in Tamil

நல்ல நேரம்:

காலை: 12.15 - 01.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Today Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.


 

மேஷம் முதல் கன்னி வரை உள்ள முதல் 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்..


துலாம் | Libra 2022 Horoscope

மற்றவர்களின் பேசும் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத மோதல்களை சந்திக்க நேரிடலாம். குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்னைக்கு தேவையில்லாத செலவுகள் இருக்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நிதானம்!

விருச்சிகம் | Scorpio 2022 Horoscope

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்னைக்கு உங்க நண்பர்களிடமும், புதுசா அறிமுகமானவர்களிடமும் ஜாக்கிரதையாக இருங்கள். தேவையில்லாமல் எதையும் பேசிவிடாதீர்கள். அப்பறம் ஆப்பு வைத்துவிடுவார்கள். எதையும் பொறுமையுடன் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே சின்ன சின்ன சலசலப்பு காணப்படும். நீங்க விட்டுகொடுத்து போவதன் மூலம் பெரிய சண்டையை தடுக்கலாம். பணவரவு சுமாராக தான் இருக்கும். ஜாக்கிரதை!

தனுசு | Sagittarius 2022 Horoscope

இன்னைக்கு நீங்க எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு லாபம் ஏற்படும். உங்க கடின உழைப்பு தக்க சன்மானம் கிடைக்கும் இன்று. கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் நாள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். இன்னைக்கு உற்சாகத்துடனும் துடிப்புடனும் காணப்படுவீர்கள். லாபம்!

மகரம் | Capricorn 2022 Horoscope

பணம் பற்றாக்குறையால் இன்னைக்கு வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை வரலாம். எனவே, குடும்ப உறுப்பினர்களிடையே யோசித்து பேசுங்கள். புதிய முயற்சியில் ஈடுபடும்போது பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். நீண்டநாள் கனவு நிறைவேறும் நாள். இன்னைக்கு உங்க துணையிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் காணப்படாது. நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். சுகம்!

கும்பம் | Aquarius 2022 Horoscope

நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களின் உதவி தேடி வரும். பணிச்சுமை அதிகமாக இருக்கும், கவனமாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிரமம் தான். அதேபோல், கூட வேலை செய்பவர்களிடமும் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும். உங்க துணையுடன் பொறுமையை இழந்து உணர்ச்சி வசப்படலாம். நிதி நிலையை பொறுத்த வரையில் திருப்திகரமானதாக இருக்காது. எனவே, பார்த்து பக்குவமாக செலவு செய்யுங்க. கண் சம்பந்தமான சின்ன பிரச்சனை வரலாம். நஷ்டம்!


Natchathira Palan in Tamil | Tamil Natchathiram Palan | Jenma Natchathiram Palan In Tamil | பதற்றத்துடன் செயல்படும் அந்த நட்சத்திரக்காரர் நீங்களா…? குறிப்பா இந்த விஷயத்துல பாத்து இருந்துக்கோங்க…! | Search Around Webஜூலை 01, 2022 - பதற்றத்துடன் செயல்படும் அந்த நட்சத்திரக்காரர் நீங்களா…? குறிப்பா இந்த விஷயத்துல பாத்து இருந்துக்கோங்க…!


மீனம் | Pisces 2022 Horoscope

வேலைசெய்யும் இடத்திலும் வீட்டிலும் சில அழுத்தங்கள் கோபத்தை ஏற்படுத்தலாம். இதனால் எல்லாரிடம் கடிந்துக் கொள்வீர்கள். எந்த பிரச்சனையையும் சுமுகமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். இது வரை வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பினால் மறப்பீர்கள். அந்த அளவிற்கு உங்க மீது பாசமாகவும், அன்போடும் நடந்துக் கொள்வார். இன்று ஆபீசில் ஒரு நல்ல மாற்றம் உருவாகக்கூடும். கோபம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்