Sat ,Jun 22, 2024

சென்செக்ஸ் 77,209.90
-269.03sensex(-0.35%)
நிஃப்டி23,501.10
-65.90sensex(-0.28%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan in Tamil: இன்னைக்கு உங்க திறமைக்கு ஏற்ற பரிசு கிடைக்கும்.. மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்டம் தான்.. ஜூலை 01, 2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan June 30, 2022 & 14:30 [IST]
Tomorrow Rasi Palan in Tamil: இன்னைக்கு உங்க திறமைக்கு ஏற்ற பரிசு கிடைக்கும்.. மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்டம் தான்.. ஜூலை 01, 2022 ராசிபலன்!Representative Image.

Tomorrow Rasi Palan in Tamil | Nalaiya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Inraiya Raasi Palan | Tomorrow Horoscope in Tamil

நல்ல நேரம்:

காலை: 12.15 - 01.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Today Horoscope: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம் | Aries 2022 Horoscope

உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை உணரும் நாள், அதை நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். சாதிக்க வேண்டும் என்று வெறித்தனமாக போராடி வந்த மேஷ ராசிக்காரர்களே இன்று வெற்றியை தன்வசப்படுத்துவிங்க. இதுவரை மந்தமாக போய்க்கொண்டிருந்த காதல் கதை புதிய திருப்பத்தை எடுக்கலாம். ஆஃபிசில் இன்று உங்களுடைய திறமை மற்றும் புத்திசாலித்தனத்தை மேல் அதிகரிகாரிகள் பாராட்டுவார்கள். உங்க குடும்பத்தினர் உங்களுடன் பல சிக்கல்களை ஷேர் செய்துகொள்வார்கள். தேவைப்படும் வேளையில் பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபத்தை அளிக்கும். ஆக மொத்தத்தில் இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும். மேன்மை!

ரிஷபம் | Taurus 2022 Horoscope

யாராவது உங்களை வம்பிற்கு இழுத்தால் பொறுமையாக இருப்பது நல்லது. இன்று ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி உங்க ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் காத்திருக்கிறது. இன்னைக்கு முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். எந்த விஷயத்தை கையாளுவதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடச் சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. துணையுடன் வீன் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எது பேசுவதாக இருந்தாலும் கவனமாக பேசுங்க. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். கவனம்!


Representative Image. ஜூலை 01, 2022 - பதற்றத்துடன் செயல்படும் அந்த நட்சத்திரக்காரர் நீங்களா…? குறிப்பா இந்த விஷயத்துல பாத்து இருந்துக்கோங்க…!


மிதுனம் | Gemini 2022 Horoscope

உங்களுடைய அன்பான குணத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சில போராட்டங்களை சந்திக்க நேரலாம். எனவே, திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்னைக்கு உங்க வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். வேண்டுமென்றே உங்களுடைய கணவரோ அல்லது மனைவியோ வார்த்தைகளால் உங்களை காயப்படுத்துவார்கள். இதனால் வருத்தமடையக் கூடும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். அதேவேளையில் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் கவலையும் இருக்கும். மகிழ்ச்சி!

கடகம் | Cancer 2022 Horoscope

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி காண்பீர்கள். இன்று விஷேசங்கள் நடத்துவதற்கு ஏற்ற நாள் அல்ல. வேலை செய்யும் இடத்தில் மும்மரமாக இருப்பீங்க. உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்களை காரணம் காட்டி உங்க துணை சண்டையிடுவார். பயணத்தின் போது பணத்தை இழப்பதற்கான வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கவலை!

சிம்மம் | Leo 2022 Horoscope

முயற்சிகள் கம்மியாக இருந்தாலும் பெரிய வெற்றி உண்டு. புதிய தொழிலில் முதலீடு செய்ய முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலமும் கடமை உணர்வோடு பணியாற்றுவதன் மூலமும் பதவி உயர்வு கிடைக்கும். கஷ்டமான வேலையையும் ஈசியாக சீக்கிரமாக செய்து முடிப்பீர்கள். இன்னைக்கு காமெடியாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்ப நலனுக்காக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்த வரை எந்த பிரச்சனையும் இல்லை. வெற்றி!

கன்னி | Virgo 2022 Horoscope

உங்களுடைய பணிவான நடத்தையை எல்லாரும் வியந்து பாராட்டுவார்கள். இதனால் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்க மனைவின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. புதிய உறவு தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்சாகம்!


துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்..

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்