Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Astrology in Tamil: பேரிழப்பை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவரா! கடக ராசிக்கு நிலையைப் பார்த்தால்.... மே 28, தினசரி ராசிபலன்! 

Manoj Krishnamoorthi May 27, 2022 & 15:05 [IST]
Today Astrology in Tamil: பேரிழப்பை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவரா! கடக ராசிக்கு நிலையைப் பார்த்தால்.... மே 28, தினசரி ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                    Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

இரக்கக் குணமும் சாதுரியமும் கொண்ட மேஷ ராசி வாசகரே உங்களுக்கு இன்று ஆரோக்கியம்  முதற்பாதியில் நன்றாக உள்ளது, மாலையில் சிறிய உபாயங்கள் வரும். இன்று செலவுகள் வழக்கத்தை விட பெரியதாக இருக்கும். தொழில் வேலைச் சுமை அதிகமாக இருக்கும், அதனால் அசௌகரியமாக இருக்கும். கல்வி நிலை நன்றாக உள்ளது, சந்தேகங்களைக் கேட்டு படிக்கும் ஆர்வம் தோன்றும். புதிய நட்பு கிடைக்கும், குடும்பத்தில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.  ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

புற அழகை விட அகத்தின் தெளிவே உண்மையான அழகு என்பதை உணர்த்தும்  உங்களுக்கு இன்றைய நாள் நிம்மதியாக இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர், குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் வாழ்வு முன்னேற்றப்பாதையில் நகரும், மாலை நேரத்தை ஆனந்தமாக நண்பர்களுடன் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிறிய பிரச்சனைகள் உருவாகும். இன்று செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, இன்று உணவு பழக்கத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில்  கருத்து வேறுபாடு வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. யோசனை!  

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இளகிய மனதுடன் அனைவரின் நலனுக்காகப் போராடும் உங்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருந்தாலும், கையில் பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். சமூகத்தின் மீது உள்ள ஆர்வம் உங்களைப் பொதுக்காரியத்தில் ஈடுபடுத்தும். சில பணக் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கையைத் தளரவிட மாட்டீர்கள், மனம் கொஞ்சம் வருத்தம் கொள்ளும்.  உடல் நலம் நன்றாக இருந்தாலும் சற்று சோர்வாக உணர்வீர்கள். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

இயற்கையாகவே கலை ஆர்வம் அதிகமாகக் கொண்ட உங்களுக்கு இன்று உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும், உடல் உற்சாகமாக இருக்கும். பழைய நண்பர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடுவீர். தொழிலில் மிதமான வளர்ச்சி இருக்கும். இன்று செல்வ நிலையில் பாதிப்பு இல்லை சீராக உள்ளது, இருப்பினும் முதலீட்டின்போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக  இருக்கும். நட்பு வட்டாரம் நன்மையைத் தரும். வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Leo 2022 Horoscope)

ஆபத்தில் உதவியோருக்கு இறுதி மூச்சுவரை விஸ்வாசமாக இருப்பட்ஏ தர்மம் என்று உணர்ந்து வாழும் சிம்ம ராசிக்காரரே  இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள்  நகைச்சுவை உணர்வால் அனைவரையும் மகிழ்ச்சி செய்து பிறர் சந்தோஷத்தில் மன நிம்மதி காண்பீர்கள். அலுவலகத்தில் இன்று சிறப்பாக பணியாற்றுவீர்கள். நிதி நிலை நன்றாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

கலை ஞானம் அதிகம் கொண்ட கன்னி இராசி வாசகரான உங்களுக்கு இன்றைய தினம் நிதி நிலைமையில் செலவுகள் மட்டும்தான் இருக்கும்.  இன்று  ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதால் முடிக்காத வேலைகளைச் செய்வீர்கள். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். காதல் வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு மூலம் வாக்குவாதம் உருவாகும்.  ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் கண் பற்றிய பிரச்சனையில் கவனமாக இருப்பது நன்மையாகும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


Representative Image. அடுத்த 6 ராசியான துலாம் முதல் மீன ராசியின் தினசரி ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்