Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோபத்தில் எதிர்பாராத முடிவுகளை எடுக்க நேரிடும்.. உஷாரா இருந்தா தப்பிக்கலாம்..! | Vaikasi Matha Rasi Palan 2023 Mithunam in Tamil

Gowthami Subramani Updated:
கோபத்தில் எதிர்பாராத முடிவுகளை எடுக்க நேரிடும்.. உஷாரா இருந்தா தப்பிக்கலாம்..! | Vaikasi Matha Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

கோபத்தில் எதிர்பாராத முடிவுகளை எடுக்க நேரிடும்.. உஷாரா இருந்தா தப்பிக்கலாம்..! | Vaikasi Matha Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image

வைகாசி மாத ராசிபலன் 2023 மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் 12 ஆவது இடத்தில் விரயஸ்தானம் ஏற்பட உள்ளதால், உடல் நலத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். கட்டாயம் வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடன் அதிகமாக இருக்கும் சூழலில் உங்களது சொந்த முயற்சியினாலோ, உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள், மாமனார் வழி உறவினர்கள் போன்றோரின் உதவியுடன் அடைக்கப்படும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இரண்டாம் இடம் என்று கொல்லக் கூடிய தனம், குடும்பம், வாக்குஸ்தானம் சொல்லக்கூடிய சந்திரனின் வீட்டில், புதிய ஆலோசனைகள் தோன்றும். அமைதியாக இருந்து வாழ்விற்குத் தேவையான புதிய ஆலோசனைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். ஒரு சில இடங்களில் கோபம் மற்றும் ஆக்ரோஷமாக பேசுவதற்கான சூழல் ஏற்படலாம். பேச்சுக்களை ஆலோசித்துப் பேசுவது நல்லது. பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி பயணம் செய்வதற்கான நிலை ஏற்படும். நல்ல செலவுகள் உண்டாகும். புதிய பொருள்கள் வாங்குவதற்கான நிலை ஏற்படும். நல்ல மாதமாக அமைகிறது.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: ஏரிகாத்த ராமன் கோவில் வழிபாடு சிறப்பைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்