Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

எல்லா பிரச்சனைகளும் சீக்கிரம் முடிவடையும் காலம் இது..! இருந்தாலும் இதுல கவனமா இருக்கணும்.. | Vaikasi Matha Rasi Palan 2023 Rishabam in Tamil

Gowthami Subramani Updated:
எல்லா பிரச்சனைகளும் சீக்கிரம் முடிவடையும் காலம் இது..! இருந்தாலும் இதுல கவனமா இருக்கணும்.. | Vaikasi Matha Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

எல்லா பிரச்சனைகளும் சீக்கிரம் முடிவடையும் காலம் இது..! இருந்தாலும் இதுல கவனமா இருக்கணும்.. | Vaikasi Matha Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image

வைகாசி மாத ராசிபலன் 2023 ரிஷபம்:

ரிஷப ராசி நபர்களுக்கு, ரிஷப லக்கினத்திலேயே சூரியன் இருப்பது நன்மையைத் தரக்கூடியதாக அமையும். குறிப்பாக, தாய்வழி, பெண்கள் வழி மூலமாக நன்மைகள் நடக்கக் கூடிய மாதமாக அமைகிறது. நேர்மறையான எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உடல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்வீர்கள். ரிஷப லக்கினத்தில் சூரியன் திகழ்வது உங்களுக்கு மேன்மையைத் தரும்.

இதுவரை இருந்த உடல் பிரச்சனைகள், கோளாறுகள் அனைத்தும் நீங்கும். வேலை சார்ந்த பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது சிறப்பு. சிறு தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். அபாரமான மகிழ்ச்சியில் திளைக்கக் கூடிய மாதமாக இந்த மாதம் அமைகிறது. எல்லா காரியத்திலும் வெற்றியை ஈட்டக் கூடிய அருமையான மாதமாக இம்மாதம் உள்ளது.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் வழிபாடு மேன்மையைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்