Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Rasipalan: இந்த வாரம் அதிர்ஷ்டம் காணும் ராசிக்காரர் நீங்களா! வார ராசிபலன் (மே 16-  22)

Manoj Krishnamoorthi May 16, 2022 & 18:10 [IST]
Weekly Rasipalan: இந்த வாரம் அதிர்ஷ்டம் காணும் ராசிக்காரர் நீங்களா! வார ராசிபலன் (மே 16-  22)Representative Image.

சுபகிருது வருடம் வைகாசி மாத முதல் வாரத்தின் (மே 16 முதல் மே 22 வரை) துலாம் முதல் மீனம் வரை ஆறு ராசிக்கான வார ராசிபலனில் (Weekly Rasipalan) உங்கள் ராசிக்கு தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காண்போம்.

 

முழுவதும் படிக்க: மேஷம் முதல் கன்னி ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.

துலாம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் அமைதியாக கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக நம்பிக்கை பிறக்கும். செல்வ நிலை அமோகமாக உள்ளது, திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் உங்கள் செல்வாக்கு அதிகமாகும். நில பரிவர்த்தனைகளில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மென்மையான உறவு நிலவும்.

சித்திரை: செல்வ நிலை உயர்வு

சுவாதி: தொழில் வளர்ச்சி

விசாகம்: நன்மை  

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

விருச்சிகம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் நன்மைகள் அதிகமாக நடைபெறும். வேலை தேடிய இருச்சிக ராசி இளைஞ்ர்களுக்கு வேலைக் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அலுவலகத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் இந்த வாரம் கிடைக்கும். வியாபரத்தில் திருப்திகரமான லாபம் இருக்கும், பொருளாதாரம் ஏற்றம் இருக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவி  கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும்.  சொத்துகள் வாங்கும் வாய்ப்பு இருக்கும். திருமண பாக்கியம்  உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

விசாகம்: மனப் பொருத்தம்

கேட்டை: செல்வ நிலை நன்றாக இருக்கும்

அனுஷம்: பண வரவு

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்மர்

தனுசு

பொது பலன்:  இந்த வாரம்  தொழிலில் அமோக வளர்ச்சி இருக்கும், எதிர்பாராத வெகுமதி கிடைக்கும். மேலும் செலவு குறைவதால் இன்று பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணர்வீர்கள். அமைதி காப்பது நன்மை, வேலையில் முன்னேற்றம் தோன்றும், அலுவலகத்தில் கடினமான வேலைகளை நீங்கள் விரைவாக முடித்து சாதனைப் படைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் வரும். பூர்வீக சொத்துகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இணையும் நேரம் உருவாகும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. 

மூல நட்சத்திரம்: பயணம் 

பூராடம்: செல்வ நிலை உயர்வு 

உத்திராடம்: புகழ்

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

மகரம்

பொது பலன்:  உங்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாகும். திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடு இருக்கும், உங்களின் வெளிப்படையான பேச்சு இயல்பு நிலையை உருவாக்கும். தொழில் மேம்படும், பண வரவு இருக்கும். பொருளாதார உயர்வு விலை உயர்ந்த பொருட்களை வாங்கத் தூண்டும் . கல்வியில் ஆர்வம் குறையும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஆன்மீக எண்ணம் அதிகமாக இருக்கும்.

உத்திராடம்: செலவு

திருவோணம்: பண வரவு

அவிட்டம்: ஏற்றம்

வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி தேவி 

கும்பம்

பொது பலன்: உங்கள் தெளிவான மனநிலை வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும். தொழிலில் இடமாற்றம் ஏற்படும், புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். கல்வியில் கவனம் தேவை. வேலைத் தேடுபவருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மனம் தைரியமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் கருத்து வேறுபாடு இருக்கும், அன்யோன்யம் குறையும்.  

சதயம்: பணத் தேவை குறையும்

அவிட்டம்: தொழில் வளர்ச்சி

பூரட்டாதி: பொறுமை

வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்

மீனம்

பொது பலன்: உங்கள்  குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது, மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். மன நிலை தெளிவாக இருக்கும். உடல்நலத்தில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும், வயிறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும்.  தொழிலில் அதிகமாக உழைக்க வேண்டும். வழக்கு சம்பந்தப்பட்ட காரியத்தில் ஜெயம் கிடைக்கும். சில மீன ராசியினருக்கு உடல் சோர்வடையும் அளவு அலைச்சல் இருக்கும். காதல் வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது. 

பூரட்டாதி: புரிதல்

உத்திரட்டாதி: அன்பு

ரேவதி: உற்சாகம்

வழிபட வேண்டிய தெய்வம்: சந்திர பகவான்

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்