Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,446.43
-425.86sensex(-0.58%)
நிஃப்டி22,290.55
-115.05sensex(-0.51%)
USD
81.57
Exclusive

Weekly Rasipalan: பேச்சால் பிரச்சனையை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் இவரா!...  

Manoj Krishnamoorthi May 16, 2022 & 16:00 [IST]
Weekly Rasipalan: பேச்சால் பிரச்சனையை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் இவரா!...  Representative Image.

சுபகிருது வைகாசி மாதத்தில் முதல் வாரத்தின் (மே16 முதல் மே 22 வரை) வார ராசிபலனில் மேஷம்- கன்னி வரை (Weekly Rasipalan) தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காண்போம்.

மேஷம்

பொது பலன்: பேச்சு வார்த்தைகளில் கவனம் காட்ட வேண்டிய தருணம் இந்த வாரம், வாரத்தின் முதல் பாதியில் சந்திராஷ்டமம் இருப்பது சில எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். கணவன் மனைவி உறவில் சில ஊடல்கள் உருவாகும். உடல்கூறை ற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் ஓரளவு நன்றாக இருக்கும், வியாபாரத்தில் லாபம் வழக்கம்போல் இருக்கும். குடும்பச் செலவுகள் இருக்கும், அதைத்தாண்டி வீண் செலவுகள் இருக்கும். பண விசயத்தில் கட்டுபாடு தேவையாகும். ஓய்வு எடுக்க  நேரம் குறைவாக இருக்கும், ஆறோகியத்தில் அதிகமான அக்கறை வேண்டும்.

அஸ்வினி: அலைச்சல்

பரணி: விரைய செலவு

கிருத்திகை: அமைதி

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: விநாயகர் 

சந்திராஷ்டமம்: மே 16, மே 17

ரிஷபம்

பொது பலன்: உங்கள் தெளிவான மனநிலையில்செலவைக் குறைக்க முயற்சித்தாலும் இந்த வாரம் செலவு அதிகமாக இருக்கும். மனம் கொஞ்சம் சோர்வாக இருக்கும், தேவையில்லாத குழப்பங்கள் வரும். தொழிலில் மாற்றம் ஏற்படும். நிதி ஓரளவு நன்றாக உள்ளது ஆனால் வாகனம் அல்லது மருத்துவம் போன்ற விரையச் செலவுகள் அதிகமாக இருக்கும். வெகு தூரப் பயணம் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நட்பு வட்டாரத்திலிருந்து உதவி கிடைக்கும். உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.குடும்பத்தில் சிறிய ஊடல் உருவாகும். 

கிருத்திகை: விரையம்

மிருக ஸீரிஷம்: தொழில் வளர்ச்சி

ரோகிணி: கருத்து வேறுபாடு

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: ரங்கநாதன்  

சந்திராஷ்டமம்: மே 18, மே 19   

 

மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் வைகாசி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

மிதுனம்

பொது பலன்:  உங்கள் வழக்கமான வேலையில் இருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மனம் அமைதி பெறும், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள் அதனால் தொழிலில் சில தடுமாற்றங்கள் உருவாகும். அலுவலகத்தில் அதீத வேலைச் சுமை தொழிலில் சில தடுமாற்றம் இருந்தாலும் பண வரவு இருக்கும், செல்வ நிலையில்  பெரியதான பாதிப்பு இருக்காது. இதுவரை இருந்த சிறிய ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். திருமண வாழ்க்கையில் நெருக்கம் அதிகமாகும்.  

மிருக ஸ்ரிஷம்: வரவு

திருவாதிரை:  செல்வ நிலை உயர்வு

புனர் பூசம்: ஆனந்தம் 

வழிபட வேண்டிய தெய்வம்: கால பைரவர்

சந்திராஷ்டமம்: மே 20, மே 21  

கடகம்

பொது பலன்: யதார்த்தமான மனதிற்கு சொந்தக்காரரான கடக ராசிக்காரரே இந்த வாரம் வீட்டில் உள்ளவர்களுடன் பொறுமையாக இருக்க வேண்டும். முக்கியமாக இளம்வயது கடக ராசியினரின் உடல்நலத்தில் கவனம் அவசியமாகும், வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். தொழில் ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. செல்வ நிலையில் பிரச்சனை இல்லை, பண வரவு அமோகமாக உள்ளது. கல்வி நிலை அமோகமாக உள்ளது. 

புனர் பூசம்: லாபம்

பூசம்: அனுசரணை

ஆயில்யம்: ஆதாயம்

வழிபட வேண்டிய தெய்வம்: திருமால்

சந்திராஷ்டமம்: மே 2

சிம்மம்

பொது பலன்: தர்ம குணமும் கம்பீர நடையும் கொண்ட உங்களுக்கு இந்த வாரம்  பொறுமை மிக அவசியம் ஆகும். அவசரப்பட்டு வாக்கு அளிக்காதீர் உங்களால் முடியுமா என்று சிந்தித்து முடிவெடுங்கள், இல்லையென்றால் வீட்டில் பிரச்சனை உருவாக்கும். தன ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது, கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் வழக்கமான நிலை நிலவும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுவது நல்லது. பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் பேச்சின் மூலம் சிக்கல்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் குறையில் இல்லை.  குடும்ப வாழ்வில் பெரியதாகப் பாதிப்பு இல்லை. கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது. 

மகம்: பொறுமை அவசியம்

பூரம்: நிதானமாக இருங்கள்

உத்திரம்: சிக்கல் 

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

கன்னி

பொது பலன்: பிறரின் தேவையில் அக்கறை கொண்ட கன்னி ராசிக்காரரே இந்த வார இறுதி உங்களுக்கு நிம்மதி அதிகமாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் யாவும் தீரும்.தொழில் நிலை சுமுகமாக இருக்கும். நிதி நிலையில் செலவு இருக்கும். கல்வியில் பிரச்சனை இருக்காது. இளம் வயது கன்னி ராசிக்காரர் சுப நிகழ்ச்சியில் கல்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  

உத்திரம்: பயணம்

அஸ்தம்: உதவி

சித்திரை: நிம்மதி

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன் வழிபாடு

மேலும் படிக்க: இந்த வாரம் அதிர்ஷ்டம் காணும் ராசிக்காரர் நீங்களா! வார ராசிபலன் (மே 16-  22) துலாம் முதல் மீனம் வரை அறிய வேண்டுமா! இங்கு க்ளிக் செய்யவும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்