Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Daily Rasi Palan: May 17, 2022 இந்த நாள் பணவரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவங்களா..?

Gowthami Subramani May 16, 2022 & 18:00 [IST]
Tamil Daily Rasi Palan: May 17, 2022 இந்த நாள் பணவரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவங்களா..?Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30-  05:00 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 10:30- 11:30 வரை & இரவு 07:30- 08:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

எல்லோரிடத்திலும் அன்பாக இருக்கும் மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்கள் வரும். முருகனுக்கு சந்தன அபிஷேகம் செய்து அதனை இட்டு செல்வது மிக நல்லது. கவனம்

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  4

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

காண்போர்களை வியக்கும் வண்ணம் செயல்படும் ரிஷப ராசி நேயர்களே, கூட்டாளிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கல், மணல், கட்டுமானங்கள் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமைகிறது. ஏராளமான வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. தியானம்

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Gemini 2022 Horoscope)

மிகத் திறமையான மிதுன ராசி நேயர்களே… இன்று உங்களுக்கு அமோகமான நாள். எங்கும் வெற்றி. எதிலும் வெற்றி. எல்லாவற்றிலும் வெற்றியை மட்டுமே சார்ந்திருப்பீர்கள். யாராக இருந்தாலும், எதிர்த்து நின்று வெற்றியை ஈட்டுவீர்கள். பிரம்மாண்டமான நாளாக அமையும். வெற்றி

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Cancer 2022 Horoscope)

எதிலும் பொறுமையுடன் இறங்கும் கடக ராசி நேயர்களே, மனதில் ஒரு உத்வேகம் தோன்றும். எதிலும் சிறந்து காணப்படுவீர்கள். முயற்சி தான் வெற்றி என்ற போக்கில் செல்வீர்கள். எல்லாவிதத்திலும் நன்மைகள் உண்டாகும். சகோதரர்கள் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும். சுப காரியங்களுக்குச் செல்வீர்கள். அனைத்து வெற்றிகளும் உங்களைத் தேடி, நாடி வரக் கூடியதாக அமையும். கம்பீரம்

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

எல்லாவற்றிலும் மிகச் சிறந்து விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சிறப்பான நாள். திடமான பண வரவு உண்டாகும். எதிர்காலத்தைச் சார்ந்து எண்ணங்கள் இருக்கும். கண்டிப்பாக, வீடு சார்ந்த ஒரு முக்கியமான விஷயம் ஒன்றை செய்வீர்கள். பெரிய அளவிற்கு வெற்றி பெறக் கூடியதாக அமையும். உறவினர்களுடன் வாக்குவாதங்கள் நிகழும். கவனத்துடன் இருக்க வேண்டும். சாதனை

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

மர்மான வீடு...Google Map காட்ட மறுக்கும் காரணம்! வைரலாகும் புகைப்படம்

கன்னி (Virgo 2022 Horoscope)

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க வேண்டும் என நினைக்கும் கன்னி ராசி நேயர்களே, இன்று மன ஒற்றுமை அதிகரிக்கும். உத்வேகம் அதிகமாக இருக்கும். கம்பீரமான பேச்சால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். சகோதரர் வழியாக உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சிறப்பு

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

துலாம் (Libra 2022 Horoscope)

துன்பங்களைத் தூள் தூளாக்கும் துலாம் ராசி நேயர்களே! பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப  உறுப்பினர்களுடன் சற்று பொறுமை காக்க வேண்டும். பேச்சில் மிகக் கவனம் தேவை. எதையும் வீணாகப் போட்டு சிந்திக்க வேண்டாம். அரசாங்கம் மூலமாக உதவி கிடைக்கும். கற்பனைத் திறன் அதிவேகமாக வரக் கூடிய நாளாக அமையும். கற்பனை

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

நினைத்ததை நினைத்தவாறு நடத்தும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான எண்ண ஓட்டங்கள் நிகழும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நல்ல சுபகாரியம் நிகழும். சிறப்பான நாளாக அமையப் போகிறது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. எனினும் கவனம் தேவை. சுறுசுறுப்பு

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்  

அதிர்ஷ்ட எண்: 1

முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் இந்த விஷயங்களை மட்டும் செய்யவே கூடாது.....!!

தனுசு (Sagittarius 2022 Horoscope)

பேரன்பாக விளங்கும் தனுசு ராசி நேயர்களே, சூடான் ஆயில் பயன்படுத்துவதைச் சற்று குறைக்க வேண்டும். பணவரவு சிறப்பாக உள்ளது. பொறுமையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அதிர்ஷ்டம்

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Capricorn 2022 Horoscope)

எல்லோரிடமும் மிகுந்த அன்பு கொண்டு விளங்கும் மகர ராசி நேயர்களே, நண்பர்கள், உறவினர்கள், மூத்த சகோதரர்கள் மூலமாக உதவி கிடைக்கும். பண வரவு உண்டாகும். நம்பிக்கை அதிக அளவில் உருவாகும். பொறுமையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நம்பிக்கை

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் (Aquarius 2022 Horoscope)

பொறுமையின் வடிவாகத் திகழும் கும்ப ராசி நேயர்களே, தொழில், வேலை, அந்தஸ்து எல்லாவற்றிலும் வெற்றி தான். அதனாலே, எதிரிகள் உருவாவார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. எதிரிகள் இருந்தாலும், அவர்களுடன் மோதி வெல்வீர்கள். சாதனை

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மாதம் ரூ. 1,75,000 சம்பளம்…! ஸ்டார்ட் அப் தமிழ்நாடு வெளியிட்ட அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு….!

மீனம்(Pisces 2022 Horoscope)

அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டத்தைப் பெறும் மீன ராசி நேயர்களே, முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக உள்ளது. கந்த சஷ்டி கவசம் கேட்பது மிக நல்லது. நல்ல தகவல்கள் கிடைக்கும். நல்ல காரியத்திற்கான பலன் கிடைக்கும். நல்ல விஷயங்கள் உண்டாகும். சிறப்பான நாளாக இந்த நாள் அமையும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மிகச்சிறப்பு

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்