Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kia EV6 விலை 60 லட்சம் ஆமாம்... இவ்வளவு காஸ்டிலியா ஒரு EV காரா...!

Manoj Krishnamoorthi Updated:
Kia EV6 விலை 60 லட்சம் ஆமாம்... இவ்வளவு காஸ்டிலியா ஒரு EV காரா...!Representative Image.

எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி தற்போது அதிகரித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இறங்கி விட்டது.  எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டிற்கு புதிய அறிமுகம் என்பதால் பல முன்னணி நிறுவனங்களும் புதிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் காரின் விற்பனையில் தீவரமாக உள்ளது. இந்த போட்டியில் Kia நிறுவனமும் உள்ளது. இதன் எலக்ட்ரிக் காரான Kia EV6 யின் செயல்திறன், விலை போன்றவை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Kia EV6 விலை 60 லட்சம் ஆமாம்... இவ்வளவு காஸ்டிலியா ஒரு EV காரா...!Representative Image

Kia EV6

தென்கொரியா நாட்டை சேர்ந்த Kia உருவாக்கிய Kia EV6 காரின் விலை 60.95- 65.95 லட்சம். இவ்வளவு காஸ்டிலியாக இருக்கும்  Kia EV6 காரில் என்னதான் ஸ்பெஷாலிட்டி இருக்கு தெரியுமா...?  ஒருமுறை சார்ஜ் செய்தால் 708 km வரை அசராமல் போகும் திறனை பெற்றது ஆகும். 

இதன் 77.4 kWh பேட்டரி 36 மணி நேரம் சார்ஜ் நிற்கும் பேட்டரி பேக்அப் கொண்டது.  Kia EV6 மோட்டார் 18 நிமிடத்திலே 10- 80 km ஸ்பீடு எடுக்கும் திறன் கொண்டது. ரியர் டிரைவ் காரான Kia EV6 முழுமையாக சார்ஜ் ஆக 73 நிமிடம் வரை ஆகும்.  இரண்டு வேரியண்டில் கிடைக்கும் Kia EV6 கரின் விலை பழைய விலையை பார்க்கும்போது 1 லட்சம் கூடி உள்ளது. 

காஸ்டிலியான விலைக்கு ஏற்றதுபோல சிறப்பான பாதுகாப்பு தரம் உள்ளது. காரில் 8 எர் பேக், எலக்ட்ரானிக் ஸ்டெமிலிட்டி, அவசர் பிரேக் சிஸ்டம் போன்ற வசதிகள் பாதுகாப்பை உறுதி செய்கிறது. குறிப்பாக இதன் Blind spot Monitoring நமக்கு தெலிவான விஷன் அளிக்கும். 

5 சீட் எலக்ட்ரிக் காரான இந்த Kia EV6 இரண்டு பவர்டெரன் ஆப்சன் கொண்டது,  229 Ps பவர் அளிக்கும் சிங்கள் மோட்டார் ரியர் மோட்டார் மற்றும் 325 Ps பவரை வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 

Hyundai Ioniq 5, Skoda Enyaq iV, BMW i4 போன்ற வாகனங்களை போலவே உள்ளது. இந்த பிராண்டின் காரை பார்க்க நினைக்கும் கார் பிரியர்களுக்கு Kia EV6 காரை பார்த்தால் நிச்சயம் மறக்க முடியாது. அத்துடன் 12.3 இன்ச் டிஸ்பிளே, ஒயர்லெஸ் போன் சார்ஜிங், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், சன் ரூஃப் போன்ற ஆப்சனும் Kia EV6 காரின் தனித்துவம் ஆகும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்