Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 vs ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 எது பெஸ்ட்? | Royal Enfield Interceptor 650 vs Harley Davidson X500

Nandhinipriya Ganeshan Updated:
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 vs ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 எது பெஸ்ட்? | Royal Enfield Interceptor 650 vs Harley Davidson X500Representative Image.

டுவீலர்களை விரும்பாத இளைஞர்களே இருக்க முடியாது. ஏனென்றால், அந்த அளவிற்கு பல விதமான மாடல்களில் தரமான பைக்குகள் வெளியாகி இளசுகளின் மனதை கவர்ந்த வண்ணம் இருக்கின்றன. அதிலும், நம்ம ஊரு இளைஞர்களுக்கு ப்ரீமியம் ரக பைக்குகளின் மீதான மோகம் சற்று அதிகம் என்றே சொல்லலாம். பல நிறுவனங்களின் பைக்குகள் இருந்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பைக்குகளுக்கு டிமாண்ட் என்பது அதிகமாகவே இருக்கும். எப்படியாவது இந்த பைக்கை வாங்க வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கும். அப்படி இளைஞர்கள் மத்தியில் ஃபேஸாக இருக்கும் இரண்டு பைக் நிறுவனங்கள் தான் ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹார்லி டேவிட்சன். இந்த இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் அதன் 2 மாடல் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அந்த இரண்டு மாடல்களில் எது சிறந்தது என்பதை இப்பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 vs ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 எது பெஸ்ட்? | Royal Enfield Interceptor 650 vs Harley Davidson X500Representative Image

ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 [Harley Davidson X500]:

➺ இன்ஜின் (CC): 500சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின்

➺ மைலேஜ் (Mileage): 20.6 kmpl

➺ பவர் (Power): 47.45 பிஎஸ்

➺ டார்க் (Torque): 52.3 என்எம்

➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 208kg

➺ கியர்பாக்ஸ் (Gearbox): 6 ஸ்பீடு

➺ வேகம் (Max speed): 160 km/h

➺ முன் சஸ்பென்ஷன் (Front suspension): 50மிமீ ரீபவுண்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய USD ஃபோர்க்

➺ பின் சஸ்பென்ஷன் (Rear suspension): ரீபவுண்ட் மற்றும் ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் மோனோஷாக்

➺ முன்பக்க டயர் (Front tyre): 120/70-ZR17

➺ பின்பக்க டயர் (Rear tyre): 160/60-ZR17

➺ வீல்பேஸ் (Wheelbase): 1,458 எம்எம்

➺ கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground clearance): 153 எம்எம்

➺ பெட்ரோல் டேங்க் (Fuel tank capacity): 13 லிட்டர்

➺ சீட் உயரம் (Seat height): 820.1 எம்எம்

➺ விலை (Price): ₹5.3 லட்சம்

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 vs ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 எது பெஸ்ட்? | Royal Enfield Interceptor 650 vs Harley Davidson X500Representative Image

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 [Royal Enfield Interceptor 650]:

➺ இன்ஜின் (CC): 647.95சிசி, ட்வின் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு இன்ஜின்

➺ மைலேஜ் (Mileage): 25 kmpl

➺ பவர் (Power): 47.5 பிஎஸ்

➺ டார்க் (Torque): 46 என்எம்

➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 218kg

➺ கியர்பாக்ஸ் (Gearbox): 6 ஸ்பீடு

➺ வேகம் (Max speed): 170 km/h

➺ முன் சஸ்பென்ஷன் (Front suspension): டெலஸ்கோபிக் போர்க்

➺ பின் சஸ்பென்ஷன் (Rear suspension): ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் டியூல் கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்ஃப்ஸ்

➺ முன்பக்க டயர் (Front tyre): 100/90-18 M

➺ பின்பக்க டயர் (Rear tyre): 130/70-R18 M

➺ வீல்பேஸ் (Wheelbase): 1,398 எம்எம்

➺ கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground clearance): 174 எம்எம்

➺ பெட்ரோல் டேங்க் (Fuel tank capacity): 13.7 லிட்டர்

➺ சீட் உயரம் (Seat height): 804 எம்எம்

➺ விலை (Price): ₹2.82 - ₹3.15 லட்சம்

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 vs ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 எது பெஸ்ட்? | Royal Enfield Interceptor 650 vs Harley Davidson X500Representative Image

எக்ஸ் 500 vs இன்டர்செப்டர் 650 எது பெஸ்ட்?

இரண்டு பைக்குகளுக்கும் இடையே 150 சிசி வித்தியாசம் இருந்தாலும் கூட, இரண்டு பைக்குகளும் ஒரே மாதிரியான டார்க் மற்றும் பவரை வெளியிடுகின்றன. இதனால், இரு பைக்குகளின் செயல்திறனமும் சமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கின் எடையானது ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 பைக்கின் எடையை விட 10 கிலோ அதிகம். எனவே, எடையை கருத்திக் கொண்டு பார்த்தால் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 செயல்திறன் அதிகமாக இருக்கலாம். ஆனால், பெரிய வித்தியாசம் இருக்காது. 

சீட் உயரத்தின் அடிப்படையில் பார்த்தால் இன்டர்செப்டர் 650 (804 மிமீ) உயரம் குறைவாக இருக்கும் ரைடர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இருப்பினும், இதன் அதிக எடை ஒரு சிலருக்கு கையாளுவதில் கடினமாக இருக்கலாம். ஆனால், எக்ஸ் 500 பைக் உயரம் அதிகமாக இருந்தாலும், பைக்கின் பெரிய டயர்கள் சரியான பேலன்ஸை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், இதன் எடையும் குறைவு என்பதால், கையாளுவதும் எளிது. 

அம்சங்களைப் பொறுத்தவரை, இரண்டு பைக்குகளும் டிஜிட்டல் இன்செட்களுடன் அனலாக் கன்சோல்களுடன் வந்துள்ளன. இரண்டும் டூயல்-சேனல் ஏபிஎஸ் (ABS) தரத்தைப் பெற்றுள்ளன. மேலும், இரண்டு பைக்குகளிலும் புளூடூத் இணைப்பு கிடையாது. விலையின் அடிப்படையில் பார்த்தால், எக்ஸ் 500 கொஞ்சம் ஓவர் ரேட் இந்தியர்களுக்கு ஒத்து வராது. ஆனால் இன்டர்செப்டர் 650 விலையும் ஓரளவு குறைவு தான், அதுமட்டுமல்லாமல், மலிவு விலையில் நல்ல செயல்திறனை கொடுக்கிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்