Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ச்ச மேனுவல் காரை எடுக்குறதுக்கே பயமா இருக்கா...? இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணாலே போதும்!

Priyanka Hochumin Updated:
ச்ச மேனுவல் காரை எடுக்குறதுக்கே பயமா இருக்கா...? இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணாலே போதும்!Representative Image.

தற்போது மக்கள் அனைவரும் அதிகம் பயன்படுத்துவது ஆட்டோமேட்டிக் காரை தான். ஏனெனில் மேனுவல் காரில் அவ்ளோ வேலை இருக்கு. அது மட்டும் இல்லாமல் ஏதாவது தவறு ஏற்பட்டால் பெரும் ஆபத்தாகிவிடும் அல்லவா. இருந்தாலும் கவலை வேண்டாம், ஒரு சில பேருக்கு இன்னும் மேனுவல் காரை தான் சிபாரிசு செய்கின்றனர். அவர்கள் இந்த விஷயங்களை மட்டும் சரியாக செய்தால் எந்த கவலையும் வேண்டாம்.

ச்ச மேனுவல் காரை எடுக்குறதுக்கே பயமா இருக்கா...? இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணாலே போதும்!Representative Image

முதலில் கார் என்ஜினை ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டியது:

மேனுவல் காரில் மொத்தம் 3 முக்கிய அம்சங்கள் உள்ளது (A - Accelerator, B - Brake, C - Clutch). இதில் எது எதுக்கு பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் புதிதாக கார் ஓட்ட போன்றவர்கள் அல்லது குழப்பத்தில் இருப்பவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

முதலில் A - Accelerator இதற்கு கேஸ் பெடல் என்ற பெயரும் உள்ளது. காரின் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரண்டாவது B - Brake இது காரின் வேகம் அதிகமாக இருக்கும் போது குறைக்க மற்றும் நம்முடைய கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

மூன்றாவது C - Clutch இது கியர் இயக்கத்தை கட்டுப்படுத்தி காரில் எந்த சஞ்சலமும் இன்றி ஸ்மூத்தாக நகர உதவும்.

இந்த மூன்றையும் சரியாக கையால தெரிந்தாலே போதும் சரியாக காரை ஓட்டலாம். இதில் நமக்கு கொஞ்சம் குழப்பமாக இருப்பது கிளட்ச் பயன்படுத்துவது தான். ஒவ்வொரு கார் மாடலை பொறுத்து கிளட்ச் 1 முதல் 5 வரை இருக்கும். மேலும் காரை ரிவர்ஸ் எடுப்பதற்கு என்று தனியாக உள்ளது.

ச்ச மேனுவல் காரை எடுக்குறதுக்கே பயமா இருக்கா...? இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணாலே போதும்!Representative Image

எப்ப என்ன செய்யணும்?

How to start a manual car - நாம் கார் ஓட்டும் எந்த கியர்-க்கு மாற்ற வேண்டும் என்றாலும் கிளட்ச் அழுத்துவது அவசியம். ஒருவேளை கிளட்ச் அழுத்தாமல் கியர் மாற்றினால் கியர் பாக்ஸின் பற்கள் தேய்ந்துவிடும். அதே போல் கிளட்ச் அழுதிக்கொண்டிருக்கும் போது தவறுதலாக கூட ஆக்சலரேட்டரை மிதிக்க கூடாது. இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் ஆக்சலரேட்டர் அதிகமாக மிதிக்கும் போதும் கிளட்ச்சை விட கூடாது. இந்த விஷயங்களை மட்டும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அடுத்து கார் ஆன் செய்யும் பொது கியர் நியூட்ரில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லைன்னா முதலில் கியரை நியூட்ரலுக்கு கொண்டு வந்து அதற்கு பின்பு தான் காரை இயக்க முடியும். அதே போல் கார் சாவியை போட்ட உடன் கிளட்ச்சில் கால் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். இதனால் கார் ஆன் செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம். மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு காரை நகர்த்துவதற்கு முன்பு பார்க்கிங் பிரேக் ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். கார் ஆன் பண்ணுவதற்கு முன்பு இவ்ளோ விஷயங்களையும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

ச்ச மேனுவல் காரை எடுக்குறதுக்கே பயமா இருக்கா...? இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணாலே போதும்!Representative Image

இப்ப ஆஃப் செய்யவதற்கு முன்பு செய்ய வேண்டியது:

How to stop a manual car - நாம் காரை நிறுத்தும் போது முதலில் கவனிக்க வேண்டியது கியர் நியூட்ரலில் இருக்கிறதா என்பது தான். அடுத்து கிளட்ச்சில் இருந்து காலை எடுத்து காரை ஆஃப் செய்யலாம். ஒரு சில நேரத்தில் கார் ஆஃப் ஆனதுக்கு பிறகும் நகரும் வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக பிரேக்கிங் பிரேக்கை பயன்படுத்தலாம். இப்போது கார் ஆஃப் செய்யலாம். அடுத்து காரின் ஜன்னல் கதவு எல்லாம் சாத்தி இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு லாக் செய்யலாம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்