Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 Ways To Save Fuel In Tamil : உங்க பைக் காரில் பெட்ரோல், டீசல் சேமிக்க இந்த 5 டிப்ஸ் போதும்...!

Manoj Krishnamoorthi October 24, 2022 & 23:00 [IST]
5 Ways To Save Fuel In Tamil : உங்க பைக் காரில் பெட்ரோல், டீசல் சேமிக்க இந்த 5 டிப்ஸ் போதும்...! Representative Image.

கையை பிடிக்க கட்டி அணைக்க பைக் இருந்தாலே போது, என்பதெல்லாம் எற்று கொள்ளுவது தான் அந்த பைக்கில் தேவையான  அளவு பெட்ரோல் எப்போதும் இருக்குமா..? இன்று நாள்தோறும் உயரும் பெட்ரோல் விலை நம்மை விழிபிதுங்க செய்யும். பைக் இல்லாமல் இருப்பது கடினமாகி விட்டது, ஆனால் உயரும் பெட்ரோல் விலை ஒருபக்கம் இருந்தாலும் பெட்ரோல் பயன்பாட்டை சேமித்தால்  நமக்கு கொஞ்சம் காசு மிச்சமாகிறதோ இல்லையோ நம் செலவை சமாளிக்க உதவும் அல்லவா...! ஆம், இந்த பதிவில் நாம் பெட்ரோல்,  டீசலை எப்படி சேமிப்பது என்பதற்கான டிப்ஸ் பார்க்க போகிறோம்.

எரிபொருள் சேமிப்பு டிப்ஸ் ( 5 Ways To Save Fuel)

5 Ways To Save Fuel In Tamil : உங்க பைக் காரில் பெட்ரோல், டீசல் சேமிக்க இந்த 5 டிப்ஸ் போதும்...! Representative Image

1. வாகனத்தின் டயர்

பெரும்பாலும் வாகனங்களின் டயரில் இருக்கும் காற்று அழுத்தம் எரிபொருள் பயன்பாட்டை தீர்மானிக்கும்.  இது நம்ப கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் சரியான காற்று அழுத்தம் இருந்தால் சிறந்த மைலேஜை பெறலாம். 

இதில் ஒரு சந்தேகம் எழும்பும், எந்த  அளவு காற்று இருக்க வேண்டும்? என்ற கேள்வியாகத் தான் இருக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்தை டயரில் பராமரித்தல் வேண்டும். மேலும், புதிய டயர்களை மாற்றும்போது வாகன தயாரிப்பு பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.  

5 Ways To Save Fuel In Tamil : உங்க பைக் காரில் பெட்ரோல், டீசல் சேமிக்க இந்த 5 டிப்ஸ் போதும்...! Representative Image

2. எப்போ பெட்ரோல் போடனும்?

நம் வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதாக இருந்தால் காலை நேரம் சரியான நேரமாக அமையும். இதற்கு என்ன காரணம் என்றால் எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி (specific gravity) காலை பொழுதில் தான் அதிகமாக இருக்கும். 

5 Ways To Save Fuel In Tamil : உங்க பைக் காரில் பெட்ரோல், டீசல் சேமிக்க இந்த 5 டிப்ஸ் போதும்...! Representative Image

3. வாகனம் பராமரிப்பு

நம் வாகனத்தை இயக்கும்போது தேவையான அளவு  மட்டுமே அக்ஸிலேட்ரை கொடுக்க வேண்டும். திடீரென ஆதிகமாக அக்ஸிலேட்ரை கொடுப்பதால் அதிக எரிபொருள் செயல்படும். பெரும்பாலும் வண்டியை 50- 60 கீ.மி வேகத்தில் பயன்படுத்துங்கள். 

முக்கியமாக நாம் சிக்னலில் நிற்கும்போது திடீரென வேகம் எடுக்க கூடாது. முடிந்தால் வாகனத்தை நிறுத்துவது எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும். மேலும், அக்ஸிலேட்ரை கொடுத்தவுடன் பிரேக் பிடிப்பதாலும் அதிகமான எரிபொருள் செலவாகும்.

5 Ways To Save Fuel In Tamil : உங்க பைக் காரில் பெட்ரோல், டீசல் சேமிக்க இந்த 5 டிப்ஸ் போதும்...! Representative Image

4.எரிபொருள் அளவு

நம்மில் பலர் பெரும்பாலும், டேங் ஃபில் பண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருப்போம். ஆனால், பெட்ரோல் டேங் எப்போது அறை பங்கிற்கு மேல் எரிபொருள் இருந்தாலே போதுமானது ஆகும். இது சரியான அழுத்தத்தில் செயல்பட்டு எரிபொருள் அதிகமாக மிச்சமாகும். 

5 Ways To Save Fuel In Tamil : உங்க பைக் காரில் பெட்ரோல், டீசல் சேமிக்க இந்த 5 டிப்ஸ் போதும்...! Representative Image

5. க்ளட்ச் மற்று க்யர்

நம் வாகனத்தில் போகும்போது அடிக்கடி க்யர் மாற்றுவோம். இதில் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது என்னவென்றால் க்ளட்ச் மற்றும் க்யர் பயன்படுத்திய உடனே வேகம் எடுக்கக்கூடாது. ஒரு நிலையான வேகத்தில் சென்று அதன் பிறகு வேகம் எடுப்பதால் எரிபொருளை சேமிக்க முடியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை