Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த நாள் பேங்க் ஸ்ட்ரைக்… ஏடிஎம் கூட வொர்க் ஆகாதாம்… மக்களே உஷார்…!

Gowthami Subramani November 09, 2022 & 12:40 [IST]
இந்த நாள் பேங்க் ஸ்ட்ரைக்… ஏடிஎம் கூட வொர்க் ஆகாதாம்… மக்களே உஷார்…!Representative Image.

வங்கிகள் வரும் நவம்பர் 19 ஆம் நாள் சனிக்கிழமையன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் இந்த நாளில் மூடப்பட்டிருக்கும். இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) அறிவித்ததாவது, நவம்பர் 19 ஆம் நாள் அன்று வங்கி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வங்கி சேவைகளைப் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நாள் பேங்க் ஸ்ட்ரைக்… ஏடிஎம் கூட வொர்க் ஆகாதாம்… மக்களே உஷார்…!Representative Image

பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும், அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். அதன் படி, வரும் நவம்பர் 19 ஆம் நாளான சனிக்கிழமை மூன்றாவது சனிக்கிழமையாக இருப்பதால் அன்றைய நாள் வங்கிகள் திறந்திருக்கும்.

இந்த நாள் பேங்க் ஸ்ட்ரைக்… ஏடிஎம் கூட வொர்க் ஆகாதாம்… மக்களே உஷார்…!Representative Image

ஆனால், நேற்று ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்று வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், பாங்க் ஆஃப் பரோடாவின் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர், வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வேளை நிறுத்தம் நடைபெறும் நாள்களில் வங்கிக் கிளைகளும், அலுவலகங்களும் சுமூகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றாலும், அலுவலங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த நாள் பேங்க் ஸ்ட்ரைக்… ஏடிஎம் கூட வொர்க் ஆகாதாம்… மக்களே உஷார்…!Representative Image

மேலும், ஏடிஎம் உள்ளிட்ட பல்வேறு வங்கி பயன்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. நவம்பர் 19 ஆம் நாள் நடக்க உள்ள இந்த வங்கி வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்