Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம்...அப்டேட் கொடுத்த அமைச்சர்!

Priyanka Hochumin Updated:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம்...அப்டேட் கொடுத்த அமைச்சர்!Representative Image.

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம்...அப்டேட் கொடுத்த அமைச்சர்!Representative Image

கடந்தாண்டு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக அபார வெற்றியைப் பெற்றது. இப்பொது சுமார் 1.5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவர்கள் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் தெரிவித்த முக்கிய வாக்குறுதி குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பதாகும். இதனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஏன் இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம்...அப்டேட் கொடுத்த அமைச்சர்!Representative Image

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தனியார் மஹாலில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம் குறித்த கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறியது, தமிழ்நாட்டில் நிதி நிலை மோசமாக உள்ளதாகவும் அது சரி செய்யப்பட்ட உடன் மிக விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம்...அப்டேட் கொடுத்த அமைச்சர்!Representative Image

மேலும் கூட்டுறவுத் துறையும் அரசின் மற்ற துறைக்கு நிகராக நான்கு சதவீத அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியுள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இப்போது வரை ரூ.40 கோடி அளவுக்கு வட்டியில்லாக் கடனை கொடுத்துள்ளோம். வரும் 6 மாதங்களில் ரூ.100 கோடிக்கு மேல் கூடுதலாகக் கடனை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நாட்டிலேயே முதல்முறையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்க திட்டமிட்டது நம்ம முதல்வர் மட்டும் தான். இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் தக்க நேரத்தில் அறிவிப்பார்" என்றும் அவர் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்