Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

நீங்கள் போட்ட பணத்தை டபுள் மடங்கில் எடுக்க SBI-ல் ஃபிக்ஸ்டு டெபாசிட்டை எப்படி தொடங்குவது..?

Gowthami Subramani October 16, 2022 & 10:30 [IST]
நீங்கள் போட்ட பணத்தை டபுள் மடங்கில் எடுக்க SBI-ல் ஃபிக்ஸ்டு டெபாசிட்டை எப்படி தொடங்குவது..? Representative Image.

ஒருவரது சேமிப்பிற்கு முக்கிய பங்கு வகிப்பது ஃபிக்ஸ்டு டெபாசிட் ஆகும். நாம் முழு நம்பிக்கையுடனும், எந்த வித பயம் இல்லாமலும் நாம் பணத்தை சேமிக்க முடியும். ஃபிக்ஸ்டு டெபாசிட் மூலம், ஒருவர் வங்கியில் பணத்தை சேமிப்பதுடன், குறிப்பிட்ட வட்டியுடன் கூடிய தொகையைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் ஃபிக்ஸ்டு டெபாசிட் மூலம் சேமிக்கப்படும் தொகை மற்றும் காலத்தைப் பொறுத்து, தொகையைத் திரும்ப பெற முடியும்.

நீங்கள் போட்ட பணத்தை டபுள் மடங்கில் எடுக்க SBI-ல் ஃபிக்ஸ்டு டெபாசிட்டை எப்படி தொடங்குவது..? Representative Image

எஸ்பிஐ வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், அதாவது எஸ்பிஐ வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், எளிமையாக ஆன்லைனிலேயே ஃபிக்ஸ்டு டெபாசிட்டை நெட் பேங்கிங் பயன்படுத்தி தொடங்க முடியும். ஏராளமான ஃபிக்ஸ்டு டெபாசிட் விருப்பங்களில் இருந்து, SBI வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

நீங்கள் போட்ட பணத்தை டபுள் மடங்கில் எடுக்க SBI-ல் ஃபிக்ஸ்டு டெபாசிட்டை எப்படி தொடங்குவது..? Representative Image

ஆன்லைன் FD வட்டி கால்குலேட்டர்

SBI FD-ன் முதிர்வுத் தொகை மற்றும் வட்டி விகிதத்தை, ஆன்லைனில் FD கால்குலேட்டரைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம். அதாவது, FD கணக்கைத் திறப்பதற்கு முன்னதாகவே இதைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும்.

அதன்படி அசல், பதவிக்காலம், வட்டி விகிதம், வட்டி செலுத்துதல் விருப்பத்தின் வகை போன்றவற்றை பதிவிட்டு, Online FD Calculator-ஐப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் போட்ட பணத்தை டபுள் மடங்கில் எடுக்க SBI-ல் ஃபிக்ஸ்டு டெபாசிட்டை எப்படி தொடங்குவது..? Representative Image

SBI FD ஆன்லைனில் திறப்பதற்கான செயல்முறைகள்

படி 1: முதலில் SBI வாடிக்கையாளர்கள் FD திறப்பதற்கு, அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்லவும்.

படி 2: பின், அதில் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, SBI நெட்பேங்கிக்கில் உள் நுழைய வேண்டும்.

படி 3: அதன் முகப்புப்பக்கத்தில் உள்ள Deposit Schemes ஆப்ஷனைக் க்ளிக் செய்து, அதில் Term Deposits என்பதற்குச் செல்ல வேண்டும். பின்னர், அதில் ‘e-fixed deposit’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

படி 4: அதில், வாடிக்கையாளர்கள் விரும்பக் கூடிய FD வகையைத் தேர்வு செய்து, “தொடரவும்” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

படி 5: பின், வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்கு வைத்திருப்பின், எந்தக் கணக்கிலிருந்து பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

படி 6: FD முதன்மை மதிப்பையும் தேர்வு செய்ய வேண்டும். தொகையை நிரப்ப வேண்டும். இதில், வாடிக்கையாளர்கள் 60 வயதுக்கு மேல் இருப்பின், “மூத்த குடிமக்கள்” Tab-ல் Tick செய்ய வேண்டும்.

படி 7: இதில், ஒட்டுமொத்த / STDR வைப்புத் தொகை அல்லது ஒட்டுமொத்த அல்லாத / TDR அல்லது இணையப் பணம் செலுத்துவதைத் தேர்வு செய்ய வேண்டும்.

படி 8: முதிர்வுக்கான வழிமுறைகளைத் தேர்வு செய்து கொண்டு, படித்த பின் விதிமுறைகள், நிபந்தனைகளை ஏற்க வேண்டும். பிறகு, FDஐ தொடங்குவதற்கு “சமர்ப்பி” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் போட்ட பணத்தை டபுள் மடங்கில் எடுக்க SBI-ல் ஃபிக்ஸ்டு டெபாசிட்டை எப்படி தொடங்குவது..? Representative Image

SBI FD-ஐ ஆன்லைனில் திறப்பதற்கு தேவைப்படுபவை

SBI-ல் ஒரு சேமிப்புக் கணக்கு (Savings Account with SBI)

ஆன்லைன் வங்கிக் கணக்கு (Online Banking Account)

மொபைல் வங்கிக் கணக்கு (Mobile Banking Account)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்