Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலிருந்தபடியே இரண்டே நிமிடத்தில் SBI நெட்பேங்கிங் சேவை பெறலாம்… எப்படி தெரியுமா..?

Gowthami Subramani October 15, 2022 & 20:00 [IST]
வீட்டிலிருந்தபடியே இரண்டே நிமிடத்தில் SBI நெட்பேங்கிங் சேவை பெறலாம்… எப்படி தெரியுமா..?Representative Image.

தற்போதைய சூழலில், பெரும்பாலானோர் பேங்கிற்கு சென்று சேவைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான பயனாக, தற்போது ஆன்லைன் சேவை மூலம் அனைத்து வசதிகளையும் பெறுமாறு உள்ளது. அதன் படி, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பதிவில், SBI வங்கியில் நெட்பேங்கிங் சேவையை எப்படி தொடங்கலாம் என்பது குறித்து காண்போம்.

வீட்டிலிருந்தபடியே இரண்டே நிமிடத்தில் SBI நெட்பேங்கிங் சேவை பெறலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

ஆன்லைன் நெட்பேங்கிங்

வங்கி விடுமுறை, வேலை போன்றவற்றின் பல்வேறு காரணங்களினால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதே சமயம், வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலைமையும் உள்ளது. இந்த அவசியத்தைக் குறைக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையிலும் அமைவதே ஆன்லைன் நெட்பேங்கிங் ஆகும். இந்த வசதியைப் பயன்படுத்தி, பெரும்பாலும் எல்லா வங்கிகளுமே சேவைகளை வழங்கி வருகிறது.

வீட்டிலிருந்தபடியே இரண்டே நிமிடத்தில் SBI நெட்பேங்கிங் சேவை பெறலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

எஸ்பிஐ வங்கியில் ஆன்லைன் நெட்பேங்கிங் ஓபன் செய்வது எப்படி?

இந்தியாவில், அதிக அளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கிகளின் பட்டியலில் ஒன்றாக விளங்குவது SBI வங்கி ஆகும். இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

மேலும், வங்கி வாடிக்கையாளர்கள் பலரும், ஆன்லைன் வங்கி சேவைகளைப் பற்றிய விவரங்களை நேரில் சென்று பெற்று வருவார்கள். ஆனால், வங்கிக்குச் செல்லாமலே ஆன்லைன் சேவைக்குப் பதிவு செய்யலாம். இது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

வீட்டிலிருந்தபடியே இரண்டே நிமிடத்தில் SBI நெட்பேங்கிங் சேவை பெறலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

எஸ்பிஐ ஆன்லைன் சேவை பதிவு சேவைக்கு தேவையானவை

வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் சேவை தொடங்குவதற்கு, கீழ்கண்டவை தேவைப்படுகின்றன.

  • ஏ.டி.எம் கார்டு
  • வங்கி கணக்கு எண்
  • சிஐஎஃப்
  • வங்கிக் கிளை எண்
  • வங்கி கணக்குடன் இணைத்திருக்கும் செல்போன் எண்
வீட்டிலிருந்தபடியே இரண்டே நிமிடத்தில் SBI நெட்பேங்கிங் சேவை பெறலாம்… எப்படி தெரியுமா..?Representative Image

எஸ்பிஐ நெட்பேங்கிங் பதிவு செய்வது எப்படி?

வாடிக்கையாளர்கள் முதலில் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அந்தப் பக்கத்தில் இருக்கும் புதிய பதிவு ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பிறகு, அந்த பக்கத்தில் ஒரு சிறிய பாப் அப் தோன்றும். அதில் சில விவரங்களைப் பதிவிட வேண்டும்.

பிறகு, அந்த பாப் அப் மெனுவில் வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, அதில் உள்ள CIF எண், வங்கிக் கிளை எண், நீங்கள் இருக்கும் நாடு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

இறுதியாக, வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் வரும். இதனைப் பதிவிட வேண்டும்.

உங்களிடம் ஏடிஎம் கார்டு இருப்பின், ஆன்லைன் சேவை உடனடியாக பதிவாகி விடும்.

இந்தப் பக்கத்தில், முதலில் ஒரு தற்காலிக பயனாளி கணக்கு பெயரை கொடுக்கும்.

பின்னர், வாடிக்கையாளர்கள் தங்களது உறுதியான User Name, Paasword-ஐக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, User Name மற்றும் Password பதிவு செய்த பின்னர், அந்தப் பக்கத்தில் இருந்து, நமது வங்கிக் கணக்கின் பக்கத்திற்குச் செல்லலாம்.

இதன் மூலம், வங்கிக் கணக்கு பக்கமும், இணையதளப் பக்கமான ஆன்லைன் சேவைப் பக்கமும் இணைக்கப்படும். அதன் பின்னர், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் நெட்பேங்கிங் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்