Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!

Gowthami Subramani November 01, 2022 & 20:00 [IST]
ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!Representative Image.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் அக்கவுண்ட் திறந்து, அதில் சேமிப்பு தொடங்க நினைப்பவரகளா நீங்கள்? அப்போ உங்களுக்கான பதிவு இது. இதில் ஆவணங்களைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் படி நிலையான வைப்புக் கணக்கைத் தொடங்கி சேமிப்பைத் தொடங்கலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!Representative Image

டெபாசிட் அக்கவுன்ட்

எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கும் நபர்கள், டெபாசிட் அக்கவுன்ட் முறையை உபயோகப்படுத்தி சேமித்து வைப்பர். பொதுவாக இந்த முறையில் சேமித்து வைக்கும் போது, வங்கிகள் குறிப்பிட்ட அளவிலான வட்டி விகிதத்துடன் சேமிப்புத் தொகையை அளிக்கிறது. இதற்கு, பயனர்கள் நிலையான வைப்புக் கணக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் படி, இதில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிலையான வைப்புக் கணக்கை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் எப்படி திறக்கலாம் என்பது பற்றி இதில் காணலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!Representative Image

ஆன்லைனில் HDFC வங்கியின் நிலையான வைப்புக் கணக்கை திறப்பது எப்படி?

பொதுவாக வங்கிக்குச் சென்று பணம் எடுப்பது, பணம் செலுத்துவது, உள்ளிட்ட வேலைகள் மற்றும் மற்ற சேவைகளுக்காக வங்கிக்கு நேரடியாக செல்வது கடினமாக உள்ளது. இதனால், வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைனிலேயே ஏராளமான சேவைகளை வங்கிகள் வழங்கி வருகின்றன.  அந்த வகையில், ஃபிக்ஸ்டு டெபாசிட்-க்கான அக்கவுண்டைத் திறப்பதை ஆன்லைன் முறையிலேயே வழங்குகின்றன.

✤ முதலில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தைப் பார்க்கவும். அதில், பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை வழங்கி இணையவங்கி போர்ட்டலில் (Internet Banking) உள்நுழையலாம்.

✤ பின் அதில் Request ஆப்ஷனில் உள்ள Account-ன் கீழ் வரும் Open Fixed Deposits என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

✤ அதன் பிறகு, அதில் கேட்கப்பட்டுள்ள வங்கிக் கிளையின் பெயர், Tenure Range, வைப்புத் தொகை, Domination போன்ற விவரங்களை நிரப்பவும். அதனைத் தொடர்ந்து, Continue என்பதைக் க்ளிக் செய்யவும்.

✤ பிறகு, விவரங்களை முழுமையாகச் சரிபார்த்து, Confirm என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

✤ இவ்வாறு செய்த பின், FD ஆலோசனைகளைப் பதிவிறக்கம் செய்யலாம். FD-ன் முன்பதிவு உறுதி செய்யப்பட்டபின், உறுதிபடுத்துதல் செய்தி பயனர்களுக்குக் காட்டப்படும்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!Representative Image

ஆஃப்லைனில் HDFC வங்கியின் நிலையான வைப்புக் கணக்கை திறப்பது எப்படி?

நிலையான வைப்பு தொடங்க நினைக்கும் நபர்கள், ஆஃப்லைன் முறையிலும் தொடங்கலாம். இதனை எப்படி செய்வது என்பதை இதில் காணலாம்.

✤ பயனர்கள் அருகிலுள்ள HDFC கிளைக்குச் செல்ல வேண்டும்.

✤ பின்னர், HDFC வங்கி அதிகாரியிடம் FD விண்ணப்பப் படிவத்தைக் கேட்கவும்.

✤ அதன் பின், படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் வங்கி அதிகாரியின் உதவியுடன் நிரப்ப வேண்டும்.

✤ பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து பணத்திய டெபாசிட் செய்து கொள்ளலாம்.

✤ பின்னர், டெபாசிட்டை வெற்றிகரமாக முன்பதிவு செய்தவுடன், வங்கி வாடிக்கையாளருக்கு FD ரசீதை வழங்க வேண்டும்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!Representative Image

தகுதி

அனைத்து தனிநபர்கள், மூத்த குடிமக்கள் போன்ற அனைவரும் HDFC வங்கியில் FD-க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு எட்டாதவர்கள் தனித்தனியாக FD-களை வைத்திருக்க அனுமதியில்லை. அவர்கள், பெரியவர்களுடன் FD கணக்கை வைத்திருக்க முடியும்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!Representative Image

தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட்

ஆதார் கார்டு

பான் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

ஓட்டுனர் உரிமம்

அரசு அடையாள அட்டை

புகைப்பட ரேஷன் கார்டு

மூத்த குடிமக்கள் அடையாள அட்டை

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் ஓபன் பண்ணனுமா..? ஐந்தே நிமிடத்தில் இப்படி பண்ணலாம்..!Representative Image

தேவையான முகவரி ஆதாரங்கள்

பாஸ்போர்ட்

தொலைபேசி கட்டணம்

மின் ரசீது

காசோலையுடன் கூடிய வங்கி அறிக்கை

அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் / அடையாள அட்டை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்