Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மக்களே… ஜாலி தான்… பொங்கல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…?

Gowthami Subramani November 12, 2022 & 10:40 [IST]
மக்களே… ஜாலி தான்… பொங்கல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…?Representative Image.

உணவுத் துறை முதன்மைச் செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழத்தில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அறிவித்த அறிக்கையின் படி பொங்கல் பரிசு தொடர்பாக குட் நியூஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்களே… ஜாலி தான்… பொங்கல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…?Representative Image

தமிழகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையைப் பொது மக்கள், எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆண்டுதோறும் அரசு சார்பில் தமிழக மக்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன், ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை.

மக்களே… ஜாலி தான்… பொங்கல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…?Representative Image

இதற்குப் பதில் அரிசி, சர்க்கரை, முந்திரி, பருப்பு, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், மக்களிடையே இது பற்றி நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அதாவது தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருள்கள் தரமற்று இருந்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த முறை சர்ச்சை ஏற்பட்டதால், இந்த முறை அரசு பொங்கல் பரிசு குறித்து ஆலோசித்து வந்தது.

மக்களே… ஜாலி தான்… பொங்கல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…?Representative Image

இந்நிலையில், வரும் 2023 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணத்தை பொங்கல் பரிசாக வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மக்களே… ஜாலி தான்… பொங்கல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…?Representative Image

இது தொடர்பாக தமிழக உணவுத் துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் எதையும் குறிப்பிட முடியாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும், பொங்கல் பண்டிகைக்குப் பரிசுத் தொகுப்புப் பதிலாக ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்