Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இத பண்ணியே ஆகணும்… இல்லனா செல்லாது… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!

Gowthami Subramani November 11, 2022 & 15:35 [IST]
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இத பண்ணியே ஆகணும்… இல்லனா செல்லாது… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…! Representative Image.

இந்தியாவில் ஒருவரது அடையாளத்தை எடுத்துணர்த்தும் வகையில் அமையும் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்து ஆதார் புதுப்பிப்பை கட்டாயமாக்கியுள்ளது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இத பண்ணியே ஆகணும்… இல்லனா செல்லாது… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…! Representative Image

ஆதார் புதுப்பிப்பு

ஆதார் அட்டை ஒருவரது முழு அடையாளத்தையும் கண்டறிய உதவும் கோப்பாக விளங்குகிறது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைக் கொண்டுவர, மத்திய அரசு வெளியிட்ட ஒரு ஆவணம் ஆகும். இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி மற்றும் பயோ மெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து இந்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இத பண்ணியே ஆகணும்… இல்லனா செல்லாது… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…! Representative Image

புதிய அரசாணை

மத்திய அரசு வெளியிட்ட இந்த அரசாணையின் படி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கட்டாயம் ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். எனவே, ஆதார் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று புதுப்பிக்கலாம்.

ஆதார் புதுப்பிப்பதற்கான இணையதளம்: https://myaadhaar.uidai.gov.in/

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இத பண்ணியே ஆகணும்… இல்லனா செல்லாது… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…! Representative Image

எதற்காக புதுப்பிக்க வேண்டும்

ஆதாரில் தகவல்களைப் புதுப்பிக்காமல் இருப்பதால், நிறைய மோசடிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த ஆதார் அப்டேட் மூலமாக நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்கவே நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆதார் புதுப்பிப்பு அவசியம் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இனி பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம், அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்