Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

UPI Credit Card: இனி யுபிஐ-லயும் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணலாம்…! RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!

Gowthami Subramani June 08, 2022 & 15:30 [IST]
UPI Credit Card: இனி யுபிஐ-லயும் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணலாம்…! RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!Representative Image.

UPI Credit Card: கிரெடிட் கார்டுகளை யுபிஐ நெட்வொர்க்குகளுடன் இணைப்பதற்கான பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அதன் படி, இப்போதைய நிலைக்கு ரூபே கிரெடிட் கார்டுடன் இந்த முறை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது (Credit Card to UPI Transfer).

யுபிஐ செயல்பாடு

இந்தியாவில், பணப்பரிவர்த்தனை முறைகள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையிலேயே இயங்குகின்றன. UPI முறை தற்போது பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலுமே, யுபிஐ முறையில் பணம் வாங்குவது மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில், UPI முறையில், கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Graphical user interface

Description automatically generated

இந்த யுபிஐ முறையில், எளிதாக ஒருவர் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெறவும் முடியும், அனுப்பவும் முடியும். அது மட்டுமல்லாமல், கடைகள், உணவகங்கள், மற்றும் இன்னும் சில இடங்களில் யுபிஐ முறையைக் கொண்டு பணம் செலுத்தலாம் (Credit card to UPI Transfer Charges).


Representative Image. Credit Card vs Debit Card in Tamil: Credit Card & Debit Card என்றால் என்ன? இந்த இரண்டில் எது பெஸ்ட்..?


யுபிஐ-யில் நிகழக் கூடிய பணப் பரிவர்த்தனை

A picture containing text, light, dark

Description automatically generated

இந்த டிஜிட்டல் முறையில் இயங்கக் கூடிய யுபிஐ-ல் கிரெடிட் கார்டு இணைப்பது குறித்தத் தகவல்களைப் பற்றி இங்கு நாம் காணலாம்.

யுபிஐ பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாக உள்ள ஒரு பணப்பரிவர்த்தனை செயல்முறையாகும். இதன் காரணமாகவே தற்போது பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். அதன் படி, 2022 ஆம் ஆண்டின் மே மாதத்தில் மட்டும் ரூ.10.40 லட்சம் கோடி அளவு பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளன. இது நாள் வரை யுபிஐ பயன்படுத்துதலில் ஏதாவது சிக்கல்கள் இருக்கும் என்பதால், அதனுடன் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த இயலாமல் இருந்தது (How to Transfer Money From Credit Card to UPI).


Representative Image. Current Account Vs Savings Account…! இந்த இரண்டுக்கும் இவ்ளோ வித்தியாசமா..? இனிமே பாத்து தான் அக்கவுன்ட் ஓபன் பண்ணனும்.


எளிய பயன்பாடு

Logo

Description automatically generated with medium confidence

 

ஆனால், தற்போது யுபிஐ செயல்முறைகள் மூலம் கிரெடிட் கார்டுகளை இயங்க வைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வசதியாகவும், எளிதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான அமைப்பு மேம்பாடு அனைத்தும் முடிந்ததும் இந்த வசதி கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது (How to Link Credit Card UPI App).

டிஜிட்டல் வளர்ச்சி

அதன் படி, தற்போது நடைமுறைக்கு வந்த இந்த முறையில், யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மூலம், வாங்குபவர்கள், இனி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்திக் கொள்ள முடியும். உண்மையில், இது டிஜிட்டல் முறையில் இயங்கக் கூடிய பணப் பரிவர்த்தனை முறை வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகச் செயல்படுகிறது (Create UPI for Credit Card Transfer).

Calendar

Description automatically generated with medium confidence

மேலும், ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பின் படி, தற்போது கிரெடிட் கார்டில் RuPay கிரெடிட் கார்டுகள் மட்டும் பயன்படுத்தப்படும். மேலும், விசா, மாஸ்டர் கார்டு போன்ற இன்னும் பிற முக்கிய கிரெடிட் கார்டு வழங்குநர்களும் இணைக்கப்படலாம் என அறிவித்துள்ளது.


Representative Image. Corporate Credit Card vs Personal: கிரெடிட் கார்டு யூஸ் பண்ணலாமா..? அப்படினா இந்த ரெண்டுல எது பெஸ்ட்னு நினைக்கிறீங்க….!


Rupay கிரெடிட் கார்டுகளை வழங்கக் கூடிய வங்கிகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), ஐடிபிஐ வங்கி (ஐடிபிஐ), யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா, பெடரல் வங்கி மற்றும் சரஸ்வத் கோ-ஆப்பரேடிவ் வங்கி போன்ற வங்கிகள் Rupay Credit Card -களை வைத்திருக்க உதவுகின்றன. மேலும், Rupay SBI, PNB மற்றும் HDFC போன்ற வங்கிகளுடன் இணைந்து Brand Card-களை வழங்குகிறது (How to Make UPI Transfer Using Credit Card).

பயனுள்ள வசதி

டிஜிட்டல் முறையில் இயங்கி வரும் இந்த செயல்பாடு அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முறையான யுபிஐ-யில் கிரெடிட் கார்டு இணைக்கும் வசதியால், வழக்கத்தை விட அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்