Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

School News Today: பள்ளி மாணவர்களே மீண்டும் நடத்தப்படும் பொதுத் தேர்வு….! பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு

Gowthami Subramani June 05, 2022 & 17:30 [IST]
School News Today: பள்ளி மாணவர்களே மீண்டும் நடத்தப்படும் பொதுத் தேர்வு….! பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்புRepresentative Image.

School News Today: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்களுக்காக பொதுத் தேர்வு குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா சூழ்நிலையின் காரணமாக, பொதுத் தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு, அதற்கான தாக்கம் குறைந்த நிலையில், மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு மே மாதம் 5 ஆம் நாள் பொதுத் தேர்வு தொடங்கி மே மாதம் 31 ஆம் நாள் வரை நடைபெற்றது.


 ONGC Recruitment 2022: மாதம் ரூ. 1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி…! உடனே அப்ளை பண்ணுங்க….. imageONGC Recruitment 2022: மாதம் ரூ. 1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி…! உடனே அப்ளை பண்ணுங்க…...


10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடந்த இந்தப் பொதுத் தேர்வில் 27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும், இந்தத் தேர்வில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்துள்ளனர். இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, மொத்தமாக 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

தேர்வு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளிவந்து விடும். அதன் படி, 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் 7 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 23 ஆம் தேதியும் வெளிவர உள்ளன.


Representative Image. உங்க ஏரியால கரன்ட் இல்லையா..? இனி கவலையே இல்ல… இத மட்டும் பண்ணுங்க…..! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு…..!


இந்த சூழ்நிலையில், பொதுத் தேர்வு எழுதாத 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக மறு தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கும் படி, அனைத்துத் தலமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் முழு விவரங்களையும் கண்டறியுமாறு கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் நடைபெறக் கூடிய உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனைப் போலவே, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களையும் கண்டறிந்து அவர்களையும் உடனடி தேர்வில் கலந்து கொள்ள வைக்குமாறு நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்