Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் TNtech City…சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு…பட்ஜெட்டில் வெளியான தகவல்

Priyanka Hochumin Updated:
தமிழகத்தில் TNtech City…சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு…பட்ஜெட்டில் வெளியான தகவல்Representative Image.

தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நடந்த பட்ஜெட் தாக்களில் தெரிவித்தார்.

தமிழகத்தில் TNtech City…சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு…பட்ஜெட்டில் வெளியான தகவல்Representative Image

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பட்டதாரிகளுக்கு வேலையின்மையை குறைக்கும் வகையில் சென்னை, கோவை மற்றும் ஓசூரில் "தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் [TNTech City] அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் TNtech City…சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு…பட்ஜெட்டில் வெளியான தகவல்Representative Image

தமிழ்நாட்டை உலக தொழில்நுட்ப துறையில் முதன்மையான இடத்தில் கொண்டு சேர்க்கவும், அதிகரித்து வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்றுள்ளார். இந்த தமிழ்நாடு தொழில்நுட்ப நகரில் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள் பொழுதுபோக்கு வசதிகள், தகவல் தொழில்நுட்பம், நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட திறன்மிகு மையங்கள் என்று அனைத்து வசதிகளுடனும் கட்டமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் TNtech City…சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு…பட்ஜெட்டில் வெளியான தகவல்Representative Image

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டில்  TIDEL பூங்காவை நிறுவி தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார். இது மற்ற மாவட்டங்களிலும் நிறுவி அங்கிருக்கும் மக்களுக்கு பயனளிக்கும் என்ற நோக்கில் ஏழு மாவட்டங்களில் நியோடைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் பகுதிகளில் 1 லட்சம் சதுரடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்