Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்.. நடந்தது என்ன? சென்னையில் பரபரப்பு..

Nandhinipriya Ganeshan November 15, 2022 & 12:45 [IST]
தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்.. நடந்தது என்ன? சென்னையில் பரபரப்பு..Representative Image.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். மேலும், கால்பந்து விளையாட்டில் கொண்ட அதிக ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துக் கொண்டு பல சாதனைகளை படைத்துவந்தார். 

இந்த நிலையில், தான் படித்துவந்த கல்லூரியிலேயே கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்றுவந்தார். பயிற்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்திருக்கிறார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால், சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது.

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்.. நடந்தது என்ன? சென்னையில் பரபரப்பு..Representative Image

இதையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி, தனது வீட்டில் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். 

ஆனாலும், பிரியாவுக்கு காலில் வலி குறைந்தபாடில்லை. இதனால், சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்கள் அடங்கிய குழு பரிசோதனை செய்ததில், பிரியாவின் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அவரின் காலை அகற்றினர். 

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்.. நடந்தது என்ன? சென்னையில் பரபரப்பு..Representative Image

அதன்பின்னர், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தநிலையில், பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை பெற்றோரிடம் ஒப்பிடைக்கும்போது, பிரியாவின் நண்பர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்