Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வெளியானது 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்

Priyanka Hochumin November 03, 2022 & 10:00 [IST]
வெளியானது 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்Representative Image.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான உலகத்தின் மிக பிரம்மாண்ட படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் "அவதார் 2 - தி வே ஆஃப் வாட்டர்" ட்ரைலர் நேற்று வெளியானது.

வெளியானது 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்Representative Image

தன்னுடைய கற்பனை கதையான அவதார் படத்தை எடுக்க வேண்டும் என்று ஜேம்ஸ் கேமரூன் ஆசைப்பட்டார். ஆனால் படத்தை உருவாக்கும் தொழிநுட்ப கருவிகள் இல்லாததால் நீண்ட ஆண்டுகள் காத்திருந்தார். அவருடையாய் காத்திருப்புக்கு பலனாக அவரின் கனவு "அவதார்" படம் 18 டிசம்பர் 2009 ஆம் ஆண்டு வெளியாகியது. படத்தின் பட்ஜெட் 23.7 கோடி அமெரிக்கன் டாலர் மட்டுமே, ஆனால் உலகளவில் படத்துடைய வசூலோ 292.2 கோடி அமெரிக்கன் டாலரைத் தாண்டியது.

வெளியானது 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்Representative Image

அடுத்து எப்போது இரண்டாம் பாகம் வரப்போகும் என்று அனைவரும் காத்திருந்த நிலையில், நேற்று "அவதார் 2 - தி வே ஆஃப் வாட்டர்" படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் ஜேக் சல்லி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்) ஏற்படும் பிரச்சனைகள், அதில் இருந்து அவர்களை காத்துக்கொள்ள போராடும் தருணங்கள் என்று பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டது. படத்தின் விசுவலைப் பற்றி சொல்லவே தேவையில்லை, எப்பையும் போல மாறுபட்ட சிந்தனை, கற்பனை, தெளிவுடன் பிரம்மிப்பளிக்கிறது.

வெளியானது 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்Representative Image

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும். படத்துடைய பட்ஜெட் 25 கோடி அமெரிக்கா டாலர். இந்த படம் முந்தைய பாகத்தை விட அதிக வசூல் எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்