Wed ,Jun 19, 2024

சென்செக்ஸ் 77,440.94
139.80sensex(0.18%)
நிஃப்டி23,554.35
-3.55sensex(-0.02%)
USD
81.57
Exclusive

Baakiyalakshmi Today Episode Tamil: நீ நல்லாவே இருக்க மாட்ட டா...சாபத்தோட நடந்த...கோபி ராதிகா கல்யாணம்! அதிரடியான திருப்பங்களுடன்!

Priyanka Hochumin October 07, 2022 & 12:45 [IST]
Baakiyalakshmi Today Episode Tamil: நீ நல்லாவே இருக்க மாட்ட டா...சாபத்தோட நடந்த...கோபி ராதிகா கல்யாணம்! அதிரடியான திருப்பங்களுடன்!Representative Image.

Baakiyalakshmi Today Episode Tamil: இத்தனை நாளா காத்திருந்த அந்த சம்பவம் இன்று கோபிக்கு நிறைவேறி விட்டது. ஆனால் நடந்த பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது இன்று பாக்கியலட்சுமியில் பரபரப்பான சம்பவங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Baakiyalakshmi Today Episode Tamil: நீ நல்லாவே இருக்க மாட்ட டா...சாபத்தோட நடந்த...கோபி ராதிகா கல்யாணம்! அதிரடியான திருப்பங்களுடன்!Representative Image

தெரியவரும் உண்மை....

ராமமூர்த்தி கல்யாண மண்டபத்திற்கு வந்து பிரச்சனை பண்ணிட்டு வீட்டுக்கு போறாரு. அங்க போய் துக்கம் தாங்காமல் ஈஸ்வரி கிட்ட உண்மைய சொல்லறாரு. அத இனியாவும் கேட்கிறாள். அப்புறம் மூன்று பேரும் கல்யாணத்தை நிறுத்த அவசரமா போறாங்க. தமிழ் சினிமா வரலாற்றில் நடக்கும் அதே சீன் தான், ஆனா அதுல  கொஞ்சம் மாற்றம் அவ்ளோ தான். கரெக்ட்டா தாலி கட்டும் போது "நிறுத்துங்க" அப்படின்னு கத்திட்டு வராங்க. ஆனா பாருங்க பாவம், என்ன பண்றது தாலி கட்டியாச்சே.

Baakiyalakshmi Today Episode Tamil: நீ நல்லாவே இருக்க மாட்ட டா...சாபத்தோட நடந்த...கோபி ராதிகா கல்யாணம்! அதிரடியான திருப்பங்களுடன்!Representative Image

ஈஸ்வரியின் சாபம்!

அங்க வந்த ஈஸ்வரி கோபிய சும்மா லெஃப்ட் ரைட்டுன்னு வாங்குறாங்க. அது தான் மாஸே இன்னைக்கு எபிசோடுல. என்ன சொல்றங்கன்னா? நான் கூட பாக்கியா முட்டாள் தனமா உன்னைய விட்டு குடுத்துட்டான்னு நினைச்சு அவள திட்டிட்டு இருந்தேன். ஆனா அவ நீ எவ்ளோ பெரிய அயோக்கியன்னு தெரிஞ்சி தான் டிவோர்ஸ் பன்னிருக்கான்னு இப்ப தான எனக்கு புரியுது. பெத்தவ நான் வயிறு எறிஞ்சி சொல்றேன் டா நீ நல்லாவே இருக்க மாட்ட. இனிமே நீ என்னோட பையன் இல்ல, உன்ன நான் தலைமுழுகிறேன்னு கண்ட படி திட்டுறாங்க. இந்த கல்யாணம் வெளங்காது நீ இதே மாறி யாருமே இல்லாம தனியா நிப்ப அப்ப எங்களோட அருமை உனக்கு தெரியும்னு சொல்ராங்க. இதுல நடுவுல ராதிகா அம்மா வந்து வாங்கி கடிக்கிறாங்க. உங்க பையன் ஒழுங்கா விவாகரத்து வாங்கி தான கல்யாணம் பன்னிருக்காரு. உங்க மருமகள வீட்லையே வச்சி நீங்க பாத்துக்க வேண்டியது தானேன்னு சொல்ராங்க. நம்ப ஈஸ்வரி செம்ம ரிப்ளை கொடுத்தாங்க! நீ வாய மூடு, என் மருமக உளச்சி சம்பாதிக்க தான வந்தா. உன்னோட பொண்ணு மாறிய அடுத்தவ புருஷன வளச்சி போட வந்தான்னு ஒரு போடு போட்டாங்க பாருங்க சூப்பர்.

Baakiyalakshmi Today Episode Tamil: நீ நல்லாவே இருக்க மாட்ட டா...சாபத்தோட நடந்த...கோபி ராதிகா கல்யாணம்! அதிரடியான திருப்பங்களுடன்!Representative Image

இதுக்கு பாக்கியா தான் காரணமா?

அப்புறம் கோபியும் ராதிகாவும், இதுக்கு பாக்கியா தான் காரணம்னு சொல்ராங்க. அதுக்கு உடனே ஈஸ்வரி நீ நிறுத்து. பாக்கியா பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த அருகதையும் கிடையாது. அவ உன்னைய விட ஆயிர மடங்கு ஒசத்தின்னு சொல்ராங்க. அப்புறம் இனியாவும் இனிமே நீங்க எனக்கு வேண்டாம் பா, எனக்கு அம்மா மட்டும் போதும்னு சொல்லிட்டு அழுவுறா. அதுக்கு அப்புறம் அங்க இருந்து அவங்கள வீட்டுக்கு அனுப்பிச்சிட்டு பாக்கியா வேலை செய்ய போறா. அங்க ராதிகா அப்புறம் அவளோட குடும்பம் கோபிய மாத்தி மாத்தி கேள்வி கேக்குறாங்க. இனிமே இங்க இருக்க வேண்டாம் நாம வீட்டுக்கு போலாம்னு கெளம்புறாங்க. அப்ப பாக்கியாவ பாத்துட்டு கோபி அவள கடுப்பேத்த ராதிகா கைய பிடிச்சிட்டு போறான்.

இதோட இன்னைக்கு எபிசோடு முடிஞ்சது, ஆனா இனிமே தான் கோபியோட தலைவலி அதிகமாக போகுது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்