Mon ,May 20, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு..! - வெளியானது மாமன்னன் படத்தின் புதிய பாடல் வீடியோ!

Chandrasekaran Updated:
நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு..! - வெளியானது மாமன்னன் படத்தின் புதிய பாடல் வீடியோ!Representative Image.

உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தின் டீசர், ராசா கண்ணு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொடி பறக்குற காலம் வந்தாச்சு எனும் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி எழுதிய வரிகளை கல்பனா ராகவேந்தர், ரக்‌ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் விழாவில் கீர்த்தி சுரேஷ், தனது நண்பர்களுடன் இணைந்து ஆடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக பெண்கள் விடுதலை குறித்து பாடல் பேசுகிறது. பாடல் வரிகளும், ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கம்யூனிஸ்ட் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதால், பாடல் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு..! - வெளியானது மாமன்னன் படத்தின் புதிய பாடல் வீடியோ!Representative Image

அந்த பாடலின் வரிகள் இங்கே

பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்

நா பித்தம் கண்ட பூ காடாம் காடாம்

வச்ச பூவும் வாடிடுச்சே போடி

நா வாழ்ந்து கெட்ட செய்தி இது தான் டி

 

வாடக்காத்து இழுக்குதடி

வாசல் தாண்ட முடியலடி

வாடக்காத்து இழுக்குதடி

வாசல் தாண்ட முடியலடி

என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்

ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்

என் ஒண்டிவீரன் இல்லாம என்ன செய்வேன்

 

காட்சி கருங்காடாம் காலெல்லாம் உன் வழி தான்

பேச்சு வெறும் பேச்சு உன் வேகம் எங்க போச்சி

நீ ஒடச்சி கெளம்ப வேணும் ஒசக்க பறக்க வேணும்

 

ஒத்தச்சி எழுந்திரி

எங்க ஒண்டிவீரன் நீ தாண்டி

நீ தாண்டி நீ தாண்டி

நீ தாண்டி தாண்டி தாண்டி தாண்டி

 

நம்ம கொடி பறக்குற காலம்

வந்தாச்சி வந்தாச்சி

வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி

நம்ம கொடி பறக்குற காலம்

வந்தாச்சி வந்தாச்சி

வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி

 

ஒத்தி வெச்ச கோவத்த நீ

நெத்தி பொட்டுல உருட்டு

ஒத்த ஒதையில் உலகத்த நீ

உள்ளங்கையில சுருட்டு

 

ஓரம் போ ஓ ஓரம் போ ஓ

தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை

எட்டுது வானம் எட்டுது

எட்டுது வானம் எட்டுது

 

வெட்டி கத தேவை இல்ல

வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல

சொட்டாங்கல்லு தொட்ட புள்ள

சொரண கெட்டா குத்தம் இல்ல

 

பொத்தி பொத்தி வளப்பாங்க

பொண்ண கொன்னு பொதைப்பாங்க

அங்க இங்க ஒளச்சாலும் ஆணி வேர அறுப்பாங்க

வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி

 

புழுதி காட்டுக்குள்ள பொழுதும் வீட்டுக்குள்ள

பெண்ணே நீ என்னத்த கண்ட தடைய தாண்டி செல்ல

அலையை மோதி தள்ள பெண்ணே நீ போடனும் சண்ட

 

பழைய பழைய பாட்ட

திருப்பி திருப்பி போட்டு

பண்ணாத பண்ணாத சேட்ட

ஒரு மந்திர தந்திரமில்ல

இந்திரன் சந்திரனில்ல

வந்திரு வந்திரு யாருனு காட்ட

 

நம்ம கொடி பறக்குற காலம்

வந்தாச்சி வந்தாச்சி

ஆமா போடு

வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி

நம்ம கொடி பறக்குற காலம்

வந்தாச்சி வந்தாச்சி

வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி

 

ஒத்தி வெச்ச கோவத்த நீ

நெத்தி பொட்டுல உருட்டு

ஒத்த ஒதையில் உலகத்த நீ

உள்ளங்கையில சுருட்டு

 

ஓரம் போ ஓ ஓரம் போ ஓ

தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை

எட்டுது வானம் எட்டுது

எட்டுது வானம் எட்டுது

 

ஆமா போடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்