Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லோகேஷை நிராகரித்த பெரிய நடிகர்! பிரம்மாண்ட கதை இருந்தாதான் நடிப்பாராம்!

UDHAYA KUMAR June 01, 2022 & 16:25 [IST]
லோகேஷை நிராகரித்த பெரிய நடிகர்! பிரம்மாண்ட கதை இருந்தாதான் நடிப்பாராம்!Representative Image.

லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்ட பெரிய நடிகர் ஒருவர், கதை வழக்கமானதாக இருக்கிறது எனக் கூறி நிராகரித்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து லோகேஷ் தரப்போ, நடிகர் தரப்போ எதுவும் கூறவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 


Representative Image.  கிளைமேக்ஸ் இந்த கமல் படத்தோடதா ? தரமான ஃபேன்பாய் சம்பவம்!


லோகேஷ் கனகராஜ், யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், மாநகரம் எனும் திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரைப்பட உலகிலும் கவனம் ஈர்த்தார். இதனால் இவருக்கு கார்த்தியின் கால்ஷீட் கிடைத்தது. அவரை வைத்து கைதி திரைப்படத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படமும் வெறித்தனமான வெற்றியைச் சுவைத்தது. 

லோகேஷ் கனகராஜின் திறமையை அறிந்துகொண்ட கமல்ஹாசன், தனது நிறுவனத்துக்கு ஒரு படத்தை எடுத்து தருமாறு கேட்டிருந்தார். கதாநாயகனாக ரஜினிகாந்தையும் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்தார். ஆனால் சில பிரச்னைகள் காரணமாக அந்த கதை அப்படியே கிடப்பில் போடப்பட, அடுத்த கதையைத் தேடி சென்றார் லோகேஷ். இம்முறை கமல்ஹாசனே ஹீரோ. ஆனால் அவர் நடிக்காத கதை, கதாபாத்திரம் இருக்கவேண்டும் என நினைத்து கதையைத் தேடிய லோகேஷுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தமிழில் கமல் செய்திராத ஒரு கதாபாத்திரத்தை தேடி கண்டுபிடித்துவிட்டாலும்கூட, அது தெலுங்கிலோ ஹிந்தியிலோ செய்திருக்கிறார். இதனால் அவருக்கு நாம் கதை செய்வது பெரிய விசயம். அவரிடமே ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்கலாம் என தனது முடிவை மாற்றிக்கொண்டு கமல்ஹாசனிடம் செல்கிறார். கமலின் ஐடியாவை ஒன்லைனாக மாற்றி கதையாக, திரைக்கதையாக, படமாக உருவாக்குகிறார் லோகேஷ். 

முன்னதாக, நடிகர் பிரபாஸிடம் ஒரு கதையை சொல்ல, அவரோ இது சாதரணமாக கதையாக இருக்கிறது பிரம்மாண்ட சப்ஜெக்ட் எதுவும் கொண்டு வா என கூறி அனுப்பிவிட்டாராம். இவரின் கதையை நிராகரித்துவிட்டு பிரபாஸ் நடித்த படம்தான் ராதே ஷ்யாம். இதனால் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்