Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணிவு படத்தில் டூப்... போட்டுடைத்த மஞ்சுவாரியர்!

UDHAYA KUMAR Updated:
துணிவு படத்தில் டூப்... போட்டுடைத்த மஞ்சுவாரியர்!Representative Image.

துணிவு படத்தில் அஜித்துக்கு டூப் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையைப் போட்டுடைத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

துணிவு படத்தில் டூப்... போட்டுடைத்த மஞ்சுவாரியர்!Representative Image

வாரிசு - துணிவு மோதல்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கியுள்ள வாரிசு படமும் அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படமும் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகயிருக்கும் நிலையில்,  தமிழ் சினிமா ரசிகர்களே பரபரப்பாகியிருக்கின்றனர்.  தமிழ்நாட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட திரைகள் கொண்ட திரையரங்குகளில் வாரிசு படமும் துணிவு படமும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதால் முதல் நாள் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் மோதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தில் டூப்... போட்டுடைத்த மஞ்சுவாரியர்!Representative Image

வாரிசா? துணிவா?

இது முதல் முறையல்ல. இதற்கு முன் இரண்டு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகும்போது ரசிகர்கள் மோதிக்கொண்டதை நாம் கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் தற்போதே வாரிசா? துணிவா? சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கிறது .

துணிவு படத்தில் டூப்... போட்டுடைத்த மஞ்சுவாரியர்!Representative Image

டிரைலர் ஷாட் டூப்

துணிவு படத்தின் டிரைலர் ஷாட்டில் வரும் கடல் காட்சியில் போட் பைக்கில் ரைடிங் போவது போன்ற ஒரு காட்சி வருகிறது. இதில் அஜித் நடிக்கவில்லை அவருக்கு பதில் டூப் ஒருவர் நடித்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்தது. 

துணிவு படத்தில் டூப்... போட்டுடைத்த மஞ்சுவாரியர்!Representative Image

மஞ்சுவாரியர் பேட்டி

மஞ்சுவாரியர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில், அவர் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர் இந்த காட்சியில் நானும் அஜித் சாரும்தான் சேர்ந்து நடித்தோம் என்று உண்மையைக் கூறியுள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

 

துணிவு படத்தில் டூப்... போட்டுடைத்த மஞ்சுவாரியர்!Representative Image

அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

டூப் என்று கூறி கலாய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்