Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"பாபா" படத்தில் மீண்டும் நடிக்கும் ரஜினிகாந்த் ..? ஆயிரம் அதிசயம் அமைந்தது "பாபா" ஜாதகம்..!

Editorial Desk Updated:
Representative Image.

தமிழ்த்திரை உலகில் எத்தனை புதிய நடிகர்கள் வந்தாலும் தனக்கான தனி இடத்தை பதித்தவர் "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்", தனது முதல் சில திரைப்படங்களில் வில்லனாக அறிமுகமாகி பின்பு அவரது  நடிப்புத் திறமையால்  கதாநாயகனாக  முன்னேறினார். அவர் தனக்கென தனி நடிக்கும் பாணியைக் கொண்டவர் குறிப்பாக ஸ்டைலாக நடிப்பதில் இவருக்கு நிகர் இவர் தான் அதனால் தான் மக்கள் அவரை "சூப்பர்ஸ்டார்" என்று அழைக்கின்றனர், திரைத்துறையில் நடிப்பதற்கு நிறம் முக்கியமில்லை திறமை தான் முக்கியம் என்று வருங்கால நடிகர்களுக்கு எடுத்துக்கட்டாக விளங்கியவர், மேலும் இவருக்கு ரசிகர்கள் 6 முதல் 60 வயதுவரை என்று கூறினால் மிகையில்லை.

Representative Image

தமிழ் திரைத்துறையில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்தாலே அந்த படம் "வெற்றி" தான் என்பதைப் போல் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இன்றைய காலகட்டத்தில் பல பழையப்படங்கள் மறுபடியும் புதிய தொழில் நுட்பத்துடன் மறுபடியும் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்து 2002 ஆம்  ஆண்டு  வெளியான "பாபா" திரைப்படத்தை மறுபடியும் வெளியிடலாம் என்று அந்த படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

Representative Image

"பாபா" திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்பட்டு அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருந்த நிலையிலும் மக்களிடையே சரியாக வரவேற்கப்படவில்லை. இதை மாற்ற ஒரு வாய்ப்பாக எண்ணிய இந்த படத்தின் ஹீரோவான  "ரஜினிகாந்த்"  இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம்  மறுபடியும் "பாபா" படத்தை  ரீ-ரிலீஸ் செய்யும் முன்னர் சில காட்சிகளை மாற்றலாம் என்றும் தேவைப்பட்டால் சில காட்சிகளில் மறுபடியும் நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள்  கூறுகின்றனர்.

Representative Image

இப்போது இருக்கும் சில நடிகர்கள் தனது படத்திற்கே சரியான நேரத்தில் வராமல் அந்த படத்தைப் பற்றியும் கவலைகொள்ளாமல் இருக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தான்  நடித்து வெளியான  படத்திற்கு தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் நடிக்கத் தயாராக உள்ளார். இதனால் தான் அவர் "சூப்பர்ஸ்டார்" என்று  திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்