மயோசிடிஸ் நோயினால் சமந்தா பாதிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மனவருத்தத்துடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, நோயிலிருந்து மெது மெதுவாக மீண்டு வரும் நிலையில், தற்போது இன்ஸ்டகிராமில் இவர் பதிவிட்ட போட்டோவால், ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
நோயினால் பாதிக்கப்பட்ட பின்னரும், தன்னுடைய கெரியரைக் கைவிடாது, தொடர்ந்து படங்கள் நடிக்கத் தயாரானார் சமந்தா. இந்நிலையிலேயே, தற்போது வருண் தவானுடன் இணைந்து "சிட்டாடல்" என்ற வெப் தொடருக்கான படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்தப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், அவருக்குப் படப்பிடிப்பில் எதிர்பாராத வகையில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெப் தொடர் ஆக்ஷன் காட்சிகளுடன் இருப்பதால், இந்த காயம் ஏற்பட்டுள்ளது. சமந்தா, இதற்கான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காயங்கள் ஏற்பட்டாலும், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாது, சமந்தா மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து தன்னுடைய காட்சிகளை நடித்து வருகிறார். இது பாராட்டத்தக்கவையாக இருப்பினும், சமந்தாவின் ரசிகர்கள் கண் கலங்கி உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…