Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரசிகர்களின் கொண்டாட்ட மழையில் வெளியானது வாரிசு..!

UDHAYA KUMAR Updated:
ரசிகர்களின் கொண்டாட்ட மழையில்  வெளியானது வாரிசு..!Representative Image.

திரையரங்குகளில் வெளியாகியுள்ளது வாரிசு திரைப்படம். 

தில் ராஜூ தயாரிப்பில்  வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ள படம் வாரிசு. தளபதி விஜய் கதாநாயகனாக  நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ரசிகர்களின் கொண்டாட்ட மழையில்  வெளியானது வாரிசு..!Representative Image

வெளியானது வாரிசு!

படம் அறிவிக்கப்பட்ட போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமலேயே இருந்தது. ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் கொஞ்சம் ரசிகர்களை கவர்ந்தனர். ஆனாலும் படம் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. வழக்கமான விஜய் படங்கள் போல இருக்காது என்றே பலரும் நினைத்தனர். இதனால் தளபதி 67 படத்தை பார்த்துக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்தனர். 

ரசிகர்களின் கொண்டாட்ட மழையில்  வெளியானது வாரிசு..!Representative Image

வெளியானது வாரிசு!

ஆனால், ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடும் பாட்டாக ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு என பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. பின் இசை வெளியீட்டு விழாவில் அத்தனை பாடல்களும் வெளியானது. இதன்மூலம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. 

ரசிகர்களின் கொண்டாட்ட மழையில்  வெளியானது வாரிசு..!Representative Image

வெளியானது வாரிசு!

இந்நிலையில் படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் ரசிகர்களின் மனதை தொட பல்வேறு வகையான வித்தைகளை கையாண்டது படக்குழு.  ரயில், பேருந்து, விமானம் என விளம்பரங்கள் பட்டையைக் கிளப்பியது. 

 

ரசிகர்களின் கொண்டாட்ட மழையில்  வெளியானது வாரிசு..!Representative Image

வெளியானது வாரிசு!

இப்படியான பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் படம் வேறு லெவலில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்