Tue ,Jul 16, 2024

சென்செக்ஸ் 80,664.86
145.52sensex(0.18%)
நிஃப்டி24,586.70
84.55sensex(0.35%)
USD
81.57
Exclusive

வாரிசு எப்படி இருக்கு?

UDHAYA KUMAR Updated:
வாரிசு எப்படி இருக்கு?Representative Image.

தில் ராஜூ தயாரிப்பில்  வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ள படம் வாரிசு. தளபதி விஜய் கதாநாயகனாக  நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 
 

வாரிசு எப்படி இருக்கு?Representative Image

கதைச்சுருக்கம்

வாரிசு படத்தின் கதை என்னவோ சூர்யவம்சத்தை நினைவுபடுத்தினாலும், விஜய் உடைய ஸ்டைல், சென்டிமென்ட், ஆக்‌ஷன், மேனரிஷத்துடன் வைத்து புது மேஜிக்கையே இயக்குநர் செய்து காட்டியுள்ளார். அப்பா பெயரை இன்ஷிலாக போட்டுக்கொள்ள விரும்பாத மகன், மகன் பெயரை சொல்லக்கூட விரும்பாத தந்தை இவர்களுக்குள் நடக்கும் ஈகோவுடன் குடும்ப சென்டிமெண்ட் கலந்தது தான் கதை.

சென்னையைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலபதிரான சரத்குமாருக்கு ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள், இதில் மூத்தவர்கள் இருவரும் அப்பாவுடன் பிசினஸைக் கவனித்துக்கொள்ள விஜய் மட்டும் அவருக்கு பிடித்த வேலையை செய்து வருகிறார்.

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க முயலும் விஜய் திடீரென வீட்டிற்கு வருகிறார். அவருடன் பிரகாஷ் ராஜ் உருவத்தில் பிரச்சனைகளும் வருகின்றன. அதையெல்லாம் எதிர்கொண்டு விஜய் எப்படி வென்றார்? குடும்பத்துடன் மீண்டும் இணைத்தாரா? என்பது தான் கதையே?

வாரிசு எப்படி இருக்கு?Representative Image

விமர்சனம்:

படம் அறிவிக்கப்பட்ட போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமலேயே இருந்தது. ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் கொஞ்சம் ரசிகர்களை கவர்ந்தனர். ஆனாலும் படம் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. வழக்கமான விஜய் படங்கள் போல இருக்காது என்றே பலரும் நினைத்தனர். இதனால் தளபதி 67 படத்தை பார்த்துக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்தனர். 

ஆனால், ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடும் பாட்டாக ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு என பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. பின் இசை வெளியீட்டு விழாவில் அத்தனை பாடல்களும் வெளியானது. இதன்மூலம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. 

இந்நிலையில் படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் ரசிகர்களின் மனதை தொட பல்வேறு வகையான வித்தைகளை கையாண்டது படக்குழு.  ரயில், பேருந்து, விமானம் என விளம்பரங்கள் பட்டையைக் கிளப்பியது. 

இப்படியான பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் படம் வேறு லெவலில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்