Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

FACT CHECK: விஜய் காப்பி அடித்து கதை சொன்னாரா? உண்மை இதுதான்!

UDHAYA KUMAR Updated:
FACT CHECK: விஜய் காப்பி அடித்து கதை சொன்னாரா? உண்மை இதுதான்!Representative Image.

பொங்கலுக்கு தமிழக ரசிகர்களுக்கு விருந்து படைக்க அஜித், விஜய் இருவரும் காத்திருக்கின்றனர். துணிவு படத்தின் மூலம் அஜித்தும், வாரிசு படத்தின் மூலம் விஜய்யும் பொங்கல் தினத்தில் ரசிகர்களைச் சந்திக்க வருகின்றனர். இருவருக்குள்ளும் போட்டி போட்டு பாடல் வெளியீடு, விளம்பர யுக்திகள் என செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் வழக்கம்போல விஜய் ஒரு குட்டிக் கதை கூறினார். 

இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய குட்டிக் கதை ஏற்கனவே ரஜினி கூறிய கதை ஒன்றின் அப்பட்டமான காப்பி என ரஜினி ரசிகர்கள் கூற, அது அப்படி இல்லை, அதிலிருந்து இன்ஸ்பயர் ஆகியிருக்கலாம். ஏன் ரஜினி மட்டும்தான் இப்படி கதை கூறுவாரா, இதுபோல் கதைகள் பல பிசினஸ் மேன்கள் கூறியதுதான் என பதிலடி கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். 

இதையடுத்து அஜித் ரசிகர்கள் சிலர் இது ஆஸ்கர் பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ இதேபோல பேசியிருப்பதாக கூறி டிவிட்டரில் உருண்டனர். ஆனால் உண்மை என்ன என்பதை புட்டு புட்டு வைத்துவிட்டனர் விஜய் ரசிகர்கள். 

சாமி பட விழாவில் ரஜினிகாந்த் பேசியவை இவைதான். எனக்கு எதிரியும் நான்தான். நண்பனும் நான்தான். என்னுடைய படம்தான் எனக்கு எதிரி. என்னுடைய படம்தான் எனக்கு தீர்வு. என் படத்துக்குதான் நான் போட்டியாக இருக்கேன். மத்தவங்க படத்துக்கு இல்ல. இப்போ எனக்கு போட்டியாக இருப்பது படையப்பா. அடுத்து அந்த படத்தை விட பெரிய ஹிட் கொடுக்கணும்

மேத்யூவின் ஆஸ்கர் பேச்சு இதுதான். எனக்கு 15 வயது இருக்கும்பொழுது, என்னிடம் 'உன் ஹீரோ யாரு?' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நான் யோசித்து சொல்லவேண்டும் என்று கூறினேன். பின்னர் 2 வாரம் கழித்து மறுபடியும் அந்த நபர் வந்து கேட்டார். அப்போது, 'அதை பற்றி நான் யோசித்து பின்னர், அது வேறு யாரும் இல்லை 'நான்தான்.. ஆனால் 10 வருஷம் தள்ளி இருக்கேன்' என்று சொன்னேன். பத்து வருஷம் கழிச்சு என் 25 வது வயசுல அந்த நபர் வந்து கேட்டப்போ, 'ரொம்ப பக்கத்துல இல்ல. என் ஹீரோ இப்போ 35 வயசுல இருக்கான்
 

FACT CHECK: விஜய் காப்பி அடித்து கதை சொன்னாரா? உண்மை இதுதான்!Representative Image

விஜய் பேசியவை

ஆனால் விஜய் சொன்ன கதைகள் அவையல்ல. கேட்பதற்கு ஒன்று போல தோன்றினாலும் அவை வித்தியாசமானவைதான் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 

கதை 1 :

“ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை இருந்தார்கள். தந்தை தனது குழந்தைகளுக்காக தினமும் சாக்லேட் வாங்கி வருவார். தங்கை தன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டுவிடுவார், அண்ணன் தன்னுடைய சாக்லேட்டை அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்துச் செல்லலாம் என ஒரு இடத்தில் வைப்பார். ஆனால் இந்த தங்கை அதையும் எடுத்து சாப்பிட்டு விடுவார். இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் தங்கை தன்னுடைய அண்ணனிடம், 'அன்பு' என்றால் என்ன ? என்று கேட்டார். அதற்கு அந்த அண்ணன், நீ தினமும் உன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டு விடுவாய். என்னுடையதும் எடுத்து சாப்பிடுவாய், நீ சாப்பிட்டுவிடுவாய் என்று தெரிந்தும் நான் அங்கு வைப்பேன். அதுக்கு பெயர்தான் அன்பு என்று கூறினார். அன்பு தான் உலகத்தை ஜெயிக்கக் கூடியது."

கதை 2

"1990 -களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். கொஞ்ச நாளிலே அவர் எனக்கு சீரியரஸான போட்டியாளராக மாறினார். அவரது தொடர் வெற்றியால் நானும் வேகமாக ஓட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். அவரைவிட அதிகமாக ஜெயிக்கணும் என்று நினைத்தேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை. நான் போட்டிபோட்டு அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய்.. உங்ககூட நீங்க போட்டிபோடுங்க.

தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். Compete with Yourself ; Be your own competition!" 

இதுபோன்ற கதைகளை ரஜினி மட்டுமல்ல, எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி கமல்ஹாசன், தனுஷ் வரை கூட அனைவரும் கூறுவதுதான். எத்தனையோ பிசினஸ்மேன்கள் கூட இதை கூறியிருக்கிறார்கள் என நியாயம் கற்பிக்கின்றனர் விஜய் ரசிகர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்