Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் டிவி சீரியல்களுக்கு எதிர்ப்பு.. ரசிகர்களை அதிகரிக்கப்போய் சிக்கலில் சிக்கிய டீம்.. | Vijay Tv Serial

Nandhinipriya Ganeshan Updated:
விஜய் டிவி சீரியல்களுக்கு எதிர்ப்பு.. ரசிகர்களை அதிகரிக்கப்போய் சிக்கலில் சிக்கிய டீம்.. | Vijay Tv SerialRepresentative Image.

முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் இப்போது 6 நாட்கள் ஒளிபரப்படுவதற்கு காரணம் அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு தான். சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. சினிமா ரேஞ்சுக்கு தான் எடுக்கப்படுகிறது என்று நினைத்தால் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு சீரியலில் லிப்லாக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. குடும்பமாக பார்க்கப்படும் சீரியலில் இப்படியான காட்சிகள் இடம்பெறுவது ரசிகர்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவி சீரியல்களுக்கு எதிர்ப்பு.. ரசிகர்களை அதிகரிக்கப்போய் சிக்கலில் சிக்கிய டீம்.. | Vijay Tv SerialRepresentative Image

ஈரமான ரோஜாவே சீசன் 2:

அதாவது, விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ஈரமான ரோஜாவே’. இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இந்நிலையில், சென்ற வருடம் முதல் தொடங்கிய இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது 300 எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. அண்ணன்-தம்பி, அக்கா-தங்கச்சியின் காதல், பாசம், துரோகம் அனைத்தும் வெளிப்படுத்தும் விதமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.  

விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த கேப்ரியலா, திரவியம் ராஜகுமாரன், சித்தார்த் குமரன், ஸ்வாதி, சாந்தின் பிரகாஷ், தினேஷ் கோபாலசாமி ஆகியோர் இத்தொடரில் நடித்து வருகின்றனர்.

விஜய் டிவி சீரியல்களுக்கு எதிர்ப்பு.. ரசிகர்களை அதிகரிக்கப்போய் சிக்கலில் சிக்கிய டீம்.. | Vijay Tv SerialRepresentative Image

சிக்கலில் சிக்கிய டீம்:

இந்நிலையில், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜேகே மற்றும் ரம்யா கதாபாத்திரங்களின் முதலிரவுக் காட்சி இடம்பெற்றுள்ளது. வழக்கமாக சீரியல்களில் முதலிரவு காட்சிகள் இடம்பெறாது. ஆனால், இந்தக் காட்சியில் திரைப்படங்களுக்கு இணையாக ரொமான்ஸ் காட்சிகள் சற்று தூக்கலாகவும், பாடலின் பின்னணியில் இந்தக் கதாபாத்திரங்களின் முத்தக்காட்சியும், படுக்கையறைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

தற்போது இந்த காட்சியால் காண்டான தொலைக்காட்சித் தொடர் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர். ரசிகர்களை அதிகரிக்கும் நோக்கில் இப்படி ரொமான்ஸ் காட்சிகள் வைத்த ஈரமான ரோஜாவே சீரியல் குழு, மாறாக சீரியல் ரசிகர்களின் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்