Mon ,May 27, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

உலகத்துலேயே மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. யார் இந்த ஜுன்கோ ஃபுருடா? | Junko Furuta Story in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உலகத்துலேயே மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. யார் இந்த ஜுன்கோ ஃபுருடா? | Junko Furuta Story in TamilRepresentative Image.

ஜுன்கோ ஃபுருடா [Junko Furuta] உலகித்திலேயே மிகவும் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்து உயிரிழந்தவர்களில் இவரும் ஒருவர். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்த கொடூர கொலை சம்பவத்தின் மூலம் ஜப்பான் நாட்டின் மீது கவனம் திரும்பியது என்றே சொல்லலாம். அப்படி என்னதான் நடந்தது வாங்க பார்க்கலாம். 

ஜுன்கோ ஃபுருடா இறக்கும்போது அவருக்கு 17 வயது. ஜப்பானில் உள்ள சைதாமா என்ற பகுதியில் ஜனவரி 18, 1971 அன்று பிறந்தார். இவர் அதே பகுதியில் உள்ள யாஷியோ மினாமி பள்ளியில் படித்துக்கொண்டே, பகுதி நேரத்தில் [Part time] ஒரு பிளாஸ்டிக் மோல்டிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். பள்ளியில் இவர் நன்றாக படிக்கும் ஒரு மாணவியாகவும் எல்லோருக்கும் பிடித்த நல்லா தோழியாக இருந்தார். 1988 நவம்பர் 25 அன்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பும்போது ஜுன்கோவிற்கு ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது.

அதைப்பார்த்த மியானோ [வழக்கின் முதல் குற்றவாளி] என்ற நபர் ஜுன்கோவை உதவி செய்கிறேன் என்று சொல்லி கட்டாயப்படுத்தி ஒரு கிடங்கிற்கு (Warehouse) அழைத்து செல்கிறான். பின்னர், தான் ஜப்பானில் மிகப்பெரிய ரவுடி குழுவான யகூச்சா குழுவை சேர்ந்தவன் என்றும், இப்போது நான் சொல்வதை நீ கேட்காவிட்டால் உன்னை இங்கே கொன்று விடுவேன் என்றும் ஜுன்கோவை மிரட்டுகிறான். பின்னர் மியானோ வலுக்கட்டாயமாக ஜுன்கோவை அங்கேயே இருமுறை கற்பழித்துவிட்டு, கயிற்றைக் கொண்டு கட்டிவிட்டு சென்று விடுகிறான். பின்னர் மியானோ அவனுடைய நண்பன் மனாட்டோவிடம் [வழக்கின் 2வது குற்றவாளி] ஜுன்கோவை பற்றி கூறி, அவனையும் அங்கு அழைத்து சென்று இருவரும் மாறி மாறி கற்பழிக்கின்றனர்.

உலகத்துலேயே மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. யார் இந்த ஜுன்கோ ஃபுருடா? | Junko Furuta Story in TamilRepresentative Image

எல்லாம் முடிந்த பின்பு ஜுன்கோவை மினாட்டோவின் வீட்டுக்கு தோழி என்ற பெயரில் அழைத்து சென்று, நிர்வாணமாக்கி பல ஆண்கள் முன்பு ஆட விடுகின்றனர். பின்பு நினைக்கும் போதெல்லாம் கற்பழிக்கின்றனர். வீட்டிற்கு வராத மகளை தேடி ஜுன்கோவின் பெற்றோர் ஊரெல்லாம் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். இந்த விஷயம் எப்படியோ அந்த கும்பலுக்கு தெரிய வருகிறது. தெரிந்தவுடன் ஜுன்கோவை கட்டாயப்படுத்தி, 'எனக்கு வீட்டில் வாழ விருப்பமில்லை நான் என்னுடைய நண்பர்களின் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறேன் தயவுசெய்து யாரும் என்னை தேட வேண்டாம் என்றும், என் மீது கொடுக்கப்பட்ட வழக்கை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறும்' தொலைப்பேசி மூலம் பேச வைக்கின்றனர்.

அப்படியே நாட்கள் நகருகிறது. கிட்டத்தட்ட 40 நாட்கள் மினாட்டோவின் வீட்டில் வைத்து நால்வரும் (மியானோ, மினட்டோ, ஷின்ஜி, ஓகுரா) பலமுறை அடித்து, உதைத்து செய்ய கூடாத அனைத்தையும் செய்து சித்திரவதை செய்கின்றனர். அந்த 40 நாட்களில் ஜுன்கோவை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் கொடுத்த வாக்கு மூலம் தெரியவருகிறது. அதை கேட்டால் இப்படியும் ஈவு இரக்கமில்லாத மனிதர்களும் இருக்கிறார்களா? என்று உங்களுக்கே தோன்றும்.

உலகத்துலேயே மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. யார் இந்த ஜுன்கோ ஃபுருடா? | Junko Furuta Story in TamilRepresentative Image

அந்த 40 நாட்களில்...

ஜுன்கோவின் அந்தரங்க முடியை வெட்டி அவள்மீதே தூவி சித்திரவதை செய்துள்ளனர். நினைக்கும் போதெல்லாம் அவளை நிர்வாணமாக்கி அடித்து ஆட விட்டு துன்புறுத்தி உள்ளனர். அந்த நான்கு பேர் முன்னால் இவளை சுயஇன்பம் செய்யுமாறு அடித்து கட்டாய படுத்தியுள்ளார். அவர்கள் ஜுன்கோவின் யோனி மற்றும் ஆசனவாய் ஆகியவற்றில் எரியும் தீக்குச்சி லைட்டர்கள், இரும்பு கம்பிகள் மற்றும் பாட்டில்கள் போன்ற பொருட்களைச் சொருகி சித்திரவதை செய்துள்ளனர். மேலும் உணவிற்கு பதிலாக அதிக அளவில் மதுபானத்தை குடிக்க வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் பல சிகரெட்டுகளை புகைக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். ஜுன்கோ தப்பித்து ஓடி விடக்கூடாது என்பதற்காக அவளுடைய பாதத்தை நெருப்பால் சுட்டு விடுகிறான் மியானோ. 

இப்படியே சித்திரவதை அனுபவித்த ஜுன்கோவுக்கு டிசம்பர் மாத கடைசியில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும், உடலில் அதிகம் உள் காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருந்ததால் அவளால் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாமல் போனது. இப்படி ஜுன்கோவின் நிலை மிகவும் மோசமாக மாறியது. இது ஒருபக்கம் இருக்க, ஜனவரி 1989ல், மியானோ ஒரு விளையாட்டில் தோற்று விடுகிறான். அந்த கோப வெறியை ஜுன்கோ மீது காட்ட முடிவு செய்து, வீட்டுக்கு வந்தவுடன் ஜுன்கோவை காரணமே இல்லாமல் எல்லோரும் சேர்ந்து உதைக்கின்றார்கள். அப்பவும் மியானோவின் ஆத்திரம் தீரவில்லை. 

உலகத்துலேயே மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. யார் இந்த ஜுன்கோ ஃபுருடா? | Junko Furuta Story in TamilRepresentative Image

பின்னர் ரெண்டு மெழுகுவர்த்திகளை ஜுன்கோவின் கண் இமைகளில் வைத்து, அவளது சிறுநீரை குடிக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால், அதை செய்ய ஜுன்கோ மறுத்ததால் அவளை DVD Player மீது தள்ளி விடுகிறான். தள்ளிய பிறகும் அவளை அடித்து கொண்டே இருக்கிறான். கடைசியில் மியானோ அருகில் இருந்த இரும்பால் ஆன ஒரு உபகரணத்தை ஜுன்கோவின் வயிற்றில் அடித்து துன்புறுத்தி அவன் வெறியை தீர்த்துக் கொள்கிறான். பின்னர் ஜுன்கோவின் தொடை, கை, முகம் மற்றும் வயிற்று பகுதியில் தீ பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைக்கிறான். ஆனால், ஜுன்கோ எந்த அசைவும் இல்லாமல் இருந்தாள். மியானோ அருகில் சென்று பார்த்தபோது ஜுன்கோவின் உயிர் உடலை விட்டு பிரிந்துவிடுகிறது.

பின்னர் அந்த அரக்கர்கள் ஜுன்கோவின் உடலை 208 லிட்டர் டிரம்மில் போட்டு அடைத்து, அவள் மேல் ஈரமான சிமெண்ட்டை ஊற்றி நிரப்பி விடுகின்றனர். நிரப்பிய பின்பு அந்த டிரம்மை ஒரு சிமெண்ட் லாரியில் போட்டு அப்புறப்படுத்திவிடுகின்றனர். அத்துடன் நிறைவடைந்தது ஜுன்கோவின் கதை. பின்னர், ஜனவரி 23, 1989 அன்று டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட 19 வயது வேறொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மியானோ மற்றும் ஒகுரா போலீஸாரால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் கழித்து, மார்ச் 29 ஆம் தேதி விசாரணைக்காக மியானோவின் வீட்டுக்கு போலீஸார் வருகிறார்கள். அப்போது, வீட்டில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைகள் போன்றவற்றை கண்டெடுக்கின்றனர்.

உலகத்துலேயே மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. யார் இந்த ஜுன்கோ ஃபுருடா? | Junko Furuta Story in TamilRepresentative Image

இது குறித்து மியானோவிடம் விசாரணை செய்யும்போது வழக்கே போடப்படாத யாருக்கும் துளி அளவும் சந்தேகமே வராத ஜுன்கோவின் கதையை இந்த கற்பழிப்பு கதைக்கு பதிலாக உளரிவிடுகிறான். இப்போது ஜுன்கோவின் [missing case] வழக்கை மீண்டும் கிளறுகின்றனர் போலீஸார். ஜுன்கோவுக்கு எதிரான குற்றங்களை ஓகுராவும் ஒப்புக்கொண்டதாக நினைத்த மியானோ, ஜுன்கோவின் உடல் இருக்கும் இடத்தை போலீசாரிடம் கூறிவிடுகிறான். மறுநாள் ஜுன்கோவின் உடல் இருந்த டிரம்மை போலீசார் கண்டுடெடுக்கின்றனர். அவள் கைரேகைகளை பரிசோதனை செய்தததில், அது ஜுன்கோவின் உடல் தான் என்று நிரூபணமாகிறது.

இதையடுத்து வட்டனபே, மினாடோ, ஓகுரா மற்றும் மினாடோவின் சகோதரர் நான்கு பேரும் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களை தொடர்ந்து ஜுன்கோவின் கொலைக்கு காரணமான பல குற்றவாளிகளும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டனர். இந்த துயர சம்பவம் நடந்து முடிந்து பல வருடங்கள் ஆயினும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எவருக்கும் போதிய தண்டனைகள் தற்போது வரை வழங்கப் படவில்லை என்பதே வருந்தக்கூடிய விஷயம். இந்த வழக்கில் நீதிதேவதை நீதிக்கு துணை நிற்காமல் போயிவிட்டாள் என்பதே துயரத்திலும் துயரம்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்