Fri ,May 24, 2024

சென்செக்ஸ் 75,418.04
1,196.98sensex(1.61%)
நிஃப்டி22,967.65
369.85sensex(1.64%)
USD
81.57
Exclusive

நண்பன் உதயநிதி கொடுத்த வாக்குறுதி; ஆசிரியர்களை எச்சரித்த அன்பில் மகேஷ்!

KANIMOZHI Updated:
நண்பன் உதயநிதி கொடுத்த வாக்குறுதி; ஆசிரியர்களை எச்சரித்த அன்பில் மகேஷ்! Representative Image.

நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி ஒருவர் விளையாட்டு வேளையின் போது வேறு வகுப்புகள் எடுப்பதை தவிர்த்து விட்டு விளையாட மட்டும் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதேபோல் உதயநிதியுடன் இணைந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ள அன்பில் மகேஷ் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

நண்பன் உதயநிதி கொடுத்த வாக்குறுதி; ஆசிரியர்களை எச்சரித்த அன்பில் மகேஷ்! Representative Image

இன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க 9.83 கோடி மதிப்பீட்டில், புதிய எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் திட்டத்தின் மூலம் அனைவரும் கல்வி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்.   பள்ளிகளில் விளையாட்டு நேரத்தில் மற்ற பாடங்கள் நடத்த கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றோம். மாணவர்கள் தங்களை புத்துணர்வு செய்து கொள்வதற்கான ஒரு நேரமாகவும் இது இருக்கும்.  எனவே விளையாட்டு வகுப்புகளில் விளையாட்டுகளை மட்டுமே மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றோம். 


மாநில கல்வி கொள்கை தொடர்பான குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணத்தை முடித்துள்ளனர். துறை சார்ந்த கருத்துக்களை கேட்டு வருகின்றனர். டிசம்பர் மாத இறுதிக்குள் கருத்து கேட்பு முடித்து ஜனவரி மாதத்தில் அறிக்கையை முதல்வரிடம் வழங்குவார்கள், இந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்வார்.

நண்பன் உதயநிதி கொடுத்த வாக்குறுதி; ஆசிரியர்களை எச்சரித்த அன்பில் மகேஷ்! Representative Image

பள்ளிகளில் போதை பொருள் பயன்பாடு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டு விட்டனர். தற்போது மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

டிஆர்பி மூலம் 9300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2013 ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் தங்களுக்கு பணி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். அது முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம். துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

 காலை சிற்றுண்டி திட்டம் முதல் கட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் கட்டம் விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.. 1545 பள்ளிகளில்,  ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்கான இரண்டாம் கட்ட திட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றது முதல் அமைச்சர் இதனை அறிவிப்பார்.

நண்பன் உதயநிதி கொடுத்த வாக்குறுதி; ஆசிரியர்களை எச்சரித்த அன்பில் மகேஷ்! Representative Image

கொரோனோ காலத்தில் தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தை நிறுத்துவதற்கான எண்ணம் இல்லை.  வசதியற்ற மாணவர்களுக்கு இது மிகப்பெரும் வரப்பிரசாதமான திட்டமாக இருக்கிறது.  இன்றைக்கும் ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என  வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மாணவர்களை புத்துணர்வு செய்வதற்கான ஒரு திட்டம். அவர்களுக்கு தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்