சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜக்தல்பூரில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக திருநங்கைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் காவல்துறை 13 திருநங்கைகளுக்கு கான்ஸ்டபிள் பதவி அளித்து பணியமர்த்தியது. இவர்களுள், 9 பேர் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தரின் பிரிவுகளில் உள்ள சத்தீஸ்கர் காவல் துறையின் சிறப்புப் பிரிவான “பஸ்தர் ஃபைட்டர்ஸ்” பிரிவின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, குடியரசு தின அணிவகுப்பு சிறப்பாக நடைபெறும். இந்த அணி வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இது பெருமைப்படுத்தும் விதமாக அமைகிறது.
சத்தீஸ்கர் மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த குடியரசு தின அணிவகுப்பில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் பங்கேற்கிறார். எனவே, நாட்டில் முதல் முறையாக திருநங்கைகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற்ற ஆண்டு 2023 என்ற பெருமையையும் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். இதில், சிறப்பு விருந்தினராக, மற்ற நாடுகளின் பிரதமர்கள், தலைவர்கள் கலந்து கொள்வர். அந்த வகையில், இந்த 74 ஆவது குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி கலந்து கொள்கிறார். இவருடன், 5 அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட உயர்குழுக்களும் பங்கேற்க உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…