Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yoga Poses for Beginners: முதல் முறையாக யோகா செய்பவர்களுக்கான ஆரம்ப நிலை யோகா பயிற்சிகள்..!!

Nandhinipriya Ganeshan June 20, 2022 & 14:00 [IST]
Yoga Poses for Beginners: முதல் முறையாக யோகா செய்பவர்களுக்கான ஆரம்ப நிலை யோகா பயிற்சிகள்..!!Representative Image.

Yoga Poses for Beginners: யோகாவின் அற்புதமான நன்மைகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், எங்கு, எப்படி தொடங்குவது என்று தான் கேள்விக்குறியாக இருக்கிறது. யோகாவில் பல வகையான யோகாசனங்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் எடுத்த உடனே செய்துவிட முடியாது. நீங்க யோகா செய்ய இப்போது தான் தொடங்குகிறீர்கள் என்றால், அதற்கான யோகா பயிற்சிகள் இருக்கின்றன. அதிலிருந்து உங்களுடைய பயிற்சியை தொடங்கலாம். பின்னர், போகப் போக கடினமான யோகா பயிற்சிகளை முயற்சிக்கலாம்.

உடல் வலிமையை வளர்க்கவும், ஆழ்ந்த உறக்கத்தை ஊக்குவிக்கவும், உடலில் நெகிழ்வுத்தன்மையை வளர்க்கவும் உதவும் போஸ்கள் உள்ளன. இப்போது ஆரம்பநிலையில் செய்யக்கூடிய சிறந்த யோகா போஸ்களை (Beginner Yoga Poses) பற்றி பார்க்கலாம்.

தினமும் பிராணாயாமம் செய்துவந்தால் ஆயுளை நீட்டிக்கலாம்...

தடாசனம் (Tadasana Benefits)

தடாசனம் ஆரம்ப அடிப்படை (Mountain Pose) ஆசனம். இது எளிதான அதேவேளையில் மிகச்சிறப்பான ஆசனமாகும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறப்பான ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனங்களை தொடங்கும் முன்பும், முடித்த பின்பும் தடாசனம் செய்ய வேண்டும்.  இந்த ஆசனம் செய்வதால் குதிகால் வலி சரியாகும். உயரமாக வளர வேண்டும் என்றால் இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தாலே போதும்.

தினமும் யோகா செய்வதால் இத்தன நன்மைகளா..? 

அதோ முக ஸ்வானாசனம் (Adho Mukha Svanasana Benefits)

இதுவும் ஒரு ஆரம்பநிலை யோகா போஸ் (Downward Facing Dog) தான். இந்த ஆசனத்தை செய்வதால் உயர் இரத்த அழுத்தம் சரி செய்யப்படுகிறது. மேலும், நாள்பட்ட தலைவலி குணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த ஆசனம் உடல் சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை போக்குகிறது. மாதவிடாய் நிற்கும் கட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. மேலும், முதுகுவலியால் அவதிப்படுபவர்களுக்கும் (beginner yoga poses for back pain) இந்த ஆசனம் ஏற்றது. 

பலகாசனம் (Phalakasana Benefits)

பலகாசனம் இதை பிளாங்க் போஸ் (Plank Pose) என்றும் அழைப்பதுண்டு. இந்த ஆசனம் உங்கள் யோகாசனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய வலிமையை வளர்ப்பதற்கு ஏற்றது. பலகாசனம் என்பது சூரிய நமஸ்காரத்தில் ஒரு பகுதியாகும், இது உடலில் நெகிழ்வுத்தன்மையை வளர்க்க உதவும் போஸ்களில் சிறப்பானவை. பலகாசனம் செய்வதன் மூலம் ‘ஸ்ட்ரெஸ் ஹார்மோன்’ எனப்படும் கார்டிசோலின் அளவு குறைகிறது என்று மருத்துவ ஆராய்ச்சி காட்டுகிறது.

வீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி...?

புஜங்காசனம் (Bhujangasana Benefit)

இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா போஸ் (Cobra Pose). பொதுவாக குழந்தை பிறந்த உடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிபடுவார்கள். அவர்கள் இந்த ஆசனத்தை தினமும் காலை, மாலை செய்து வந்தால் முதுகுத் தண்டு பலம் பெற்று முது வலி பிரச்சனைக்கு தீர்வு (beginner yoga poses for hip pain) காணலாம். அதேபோல், இந்த ஆசனத்திற்கு பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் உள்ளது. இதை தினமும் செய்து வந்தால் உடல் சோர்வு தன்மை அகன்று, மன அழுத்த பிரச்சனையும் குறைந்துவிடும். உடலை எப்போது சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மூக்கில் இத்தன வகையா? உங்க மூக்கின் வகையை வைத்தே நீங்க இப்படிதா என்று கண்டுபிடித்துவிடலாம்….

சக்ரவாகசனம் (Chakravakasana Benefits)

ஒற்றைத் தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த ஆசனம் (Cat-Cow Pose) மிகவும் உதவியாக இருக்கும். சக்ரவாகசனம் உங்கள் கீழ்/மேல் முதுகு, முழங்கால்கள், இடுப்பு, இடுப்பு மற்றும் மையத்தின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க மிகவும் பயனுள்ள யோகா (beginner yoga poses for flexibility) தோரணையாகும். ஆரோக்கியமான முதுகெலும்பை பராமரிக்க, நீங்கள் பயிற்சி செய்யக்கூடிய மிக முக்கியமான யோகா போஸ்களில் சக்ரவாகசனம் ஒன்றாகும். 


உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா அப்ப இந்த யோகா தான் செய்யனும்..!! யோகாசனத்தின் வகைகள் & பயன்கள்..


உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்