Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குணப்படுத்தவே முடியாத அல்பினிசம் நோய் எதனால் வருகிறது? | What is Albinism in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
குணப்படுத்தவே முடியாத அல்பினிசம் நோய் எதனால் வருகிறது? | What is Albinism in TamilRepresentative Image.

அல்பினிசம் என்றால் என்ன?

அல்பினிசம் என்பது ஒரு அரிய மரபணு தொற்றுநோய்; இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சருமம் வெண்மை நிறத்தில் இருக்கும். அதாவது, தோல், கண்கள் மற்றும் முடிகளின் மெலனின் உற்பத்தி குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. சருமம் மற்றும் முடிகளின் நிறம், கண்களின் நரம்பு வளர்ச்சி போன்றவற்றில் முக்கிய பங்கு வகிப்பது "மெலனின்" என்ற ஒரு இயற்கை தோல் நிறமி. உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் இதில் குறைபாடு ஏற்படும்போது ஒரு மனிதனின் தோல், முடி ஆகியவை வெள்ளை, வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். மேலும், இதனால் தோல் புற்றுநோய் மற்றும் கண்களின் செயல்பாடுகளில் பிரச்சனைகள் ஏற்படும். இந்த அல்பினிசத்தில் பல வகை உண்டு. 

குணப்படுத்தவே முடியாத அல்பினிசம் நோய் எதனால் வருகிறது? | What is Albinism in TamilRepresentative Image

அல்பினிசம் வகைகள்:

பொதுவாக, அல்பினிசத்தில் இரண்டு முக்கியமான வகைகள் காணப்படுகின்றன. ஒன்று அக்குலோக்யூட்டனஸ் அல்பினிசம், மற்றொன்று ஓக்குலர் அல்பினிசம். அல்பினிசத்தின் பொதுவான வடிவமான அக்குலோக்யூட்டனஸ் அல்பினிசம் முக்கியமாக தோல் மற்றும் கண்களில் தான் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் 7 வகைகள் உள்ளன. அதேபோல், மற்றொரு வகையான ஓக்குலர் அல்பினிசத்தில் ஹெர்மன்ஸ்கி-புட்லாக் நோய்க்குறி (HPS) மற்றும் செடியாக்-ஹிகாஷி நோய்க்குறி (CHS) என இரண்டு வகைகள் இருக்கின்றன. 

OCA1 வகை - இது டைரோசினேஸில் உள்ள குறைபாடாகும். இதனால் மரபணுவில் இழப்பு மற்றும் மெலனின் இயலாமையை ஏற்படுத்துகிறது. 

OCA2 வகை - இது மரபணு உற்பத்தியில் ஏற்படும் குறைபாடாகும். இதனால் p புரதத்தின் உற்பத்தியானது குறைகிறது. 

OCA3 வகை - இது TYRP1 மரபணு உற்பத்தியில் உள்ள குறைபாடாகும். இதனால், மெலனோசோம்களில் பாதிப்பு ஏற்படுகிறது. 

OCA4 வகை - இது SLC45A2 என்ற மரபணு உற்பத்தியில் உள்ள குறைபாடாகும். இது சருமத்தின் சாதாரண நிறமிக்கு காரணமாக அமைகிறது. 

OCA5 வகை - இது மிகவும் அரிதான ஒரு வகை. இதில் மரபணு குறைபாடு எதுவும் இருக்காது.

OCA6 வகை - இது SLC24A5 மரபணுவின் குறைபாடாகும். இது இயற்கையான தோல் நிறத்திற்கும் காரணமாக அமைகிறது

OCA7 வகை - இது LRMDA வில் உள்ள குறைபாடு ஆகும். இது மெலனோசைட் வேறுபாட்டில் பங்கு வகிக்கிறது. இதுவும் அரிதான ஒன்றே.

ஓக்குலர் அல்பினிசம் - GPR143 மரபணு குறைப்பாட்டால் ஏற்படக்கூடிய இது பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த நிலை பொதுவாக ஆண்களில் அதிகமாக காணப்படுகிறது. 

ஹெர்மன்ஸ்கி புட்லாக் - இது பார்வை பிரச்சினைகள், இரத்த தகடுகள் காரணமாக இரத்தம் உறைதலில் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

செடியாக் ஹிகாஷி - நோயெதிர்ப்பு குறைபாடுகளால் ஏற்படுகிறது. இது தொற்று, சிராய்ப்பு மற்றும் இரத்தப் போக்கு அதிகரிப்பு அபாயத்திற்கு வழி வகுக்கும்.

குணப்படுத்தவே முடியாத அல்பினிசம் நோய் எதனால் வருகிறது? | What is Albinism in TamilRepresentative Image

அல்பினிசம் ஏற்படக் காரணங்கள்:

ஏழு வெவ்வேறு மரபணுக்களில் பிறழ்வு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் தோல், கண்கள் மற்றும் முடியின் மெலனின் நிறமி குறைகிறது. இதற்கான காரணம் தான் என்ன?

பொதுவாக, நோய் ஏற்படுவதற்கான காரணமான மரபணு குறைபாடு பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது. இதனால் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெற்றோரிடம் இருந்து அவரின் குழந்தைக்கு பாதிப்பு கடத்தப்படுகிறது. அதாவது, ஒருவர் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டால் அவரின் குழந்தைக்கும் அதே பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 25% உள்ளது. 

குணப்படுத்தவே முடியாத அல்பினிசம் நோய் எதனால் வருகிறது? | What is Albinism in TamilRepresentative Image

அல்பினிசத்தின் அறிகுறிகள்:

  • வெளிர் நிறத்தோல்
  • கண்களானது நீலநிறம் அல்லது ப்ரவுன் நிறத்தில் காணப்படும்
  • வெளிர்/பழுப்பு/மஞ்சள் நிறத்தில் தலைமுடி
  • புருவம் மற்றும் கண்களில் உள்ள முடிகள் வெளிர் நிறத்தி காணப்படும்
  • கருவிழிகள் ஒளி ஊடுருவக்கூடிய வகையில் சிவப்பு மற்றும் லேசான நிறத்தில் காணப்படும்
  • கண்களை நகர்த்த முடியாமல் போதல்
  • கண்களின் உணர்திறன் குறைதல்
  • பார்வையில் குறைபாடு ஏற்படுதல்
  • மங்கலான பார்வை
  • ஒரு சிலருக்கு பார்வை இழப்பும் இருக்கும்

இந்த அல்பினிசம் நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. சருமத்தை பாதுகாப்பதன் மூலமும் பராமரிப்பதன் மூலமும் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வரலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்