Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Panguni Amavasai 2023: அமாவாசைக்கு சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்க கூடாத காய்கறிகள்!

Gowthami Subramani Updated:
Panguni Amavasai 2023: அமாவாசைக்கு சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்க கூடாத காய்கறிகள்!Representative Image.

அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு அவர்களை வணங்கி அவர்களது புகைப்படங்களுக்கு மாலையிட்டு உணவுகளைப் படையலிட்டு வழிபடுவர். அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு என்று கூறுவர். இவ்வாறு தர்ப்பணம் செய்தால், மறைந்த முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

Panguni Amavasai 2023: அமாவாசைக்கு சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்க கூடாத காய்கறிகள்!Representative Image

அமாவாசை தினத்தில் பெண்கள் விரதம் பிடிக்கக் கூடாது என்று கூறுவர். அதிலும், சுமங்கலி பெண்கள் கட்டாயம் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். வீட்டில் முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படத்திற்கு முன் படையலிட்டு வழிபடுவர். பின், காக்கைக்கு படைத்து விட்டு அக்கம் பக்கத்தினருக்கு அளித்தும், தாமும் உண்பர். இவ்வாறு சமைக்கப்படும் உணவுகளில் சேர்க்கப்படும் காய்கறிகளில் சிலவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகளும் நிறைந்துள்ளது. இந்தப் பதிவில், அமாவாசை படையலுக்கு சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்கக் கூடாத காய்கறிகள் பற்றிக் காணலாம்.

Panguni Amavasai 2023: அமாவாசைக்கு சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்க கூடாத காய்கறிகள்!Representative Image

அமாவாசைக்கு பயன்படுத்த வேண்டிய காய்கறிகள்

அவரைக்காய்

பயத்தங்காய்

புடலங்காய்

வாழைப்பூ

வாழைக்காய் (தை அமாவாசை ஸ்பெஷல்: வாழைக்காய் கறி செய்வது எப்படி?)

வாழைத்தண்டு

சக்கரவள்ளி

சேப்பங்கிழங்கு

சேனை

மாங்காய்

மாங்கா இஞ்சி

பிரண்டை

நெல்லிக்காய்

இஞ்சி

மிளகு

பாரிக்காய்

பாகற்காய்

கறிவேப்பிலை

உளுந்து

பாசிப்பருப்பு

கோதுமை

வெள்ளை பூசணிக்காய்

மஞ்சள் பூசணிக்காய்

வெல்லம்

இவை அனைத்தும் அமாவாசைக்கு பயன்படுத்த வேண்டிய காய்கறிகள் ஆகும்.

Panguni Amavasai 2023: அமாவாசைக்கு சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்க கூடாத காய்கறிகள்!Representative Image

அமாவாசைக்குப் பயன்படுத்தக் கூடாத காய்கறிகள்

நூக்கல்

முள்ளங்கி

முட்டைக்கோஸ்

கீரை வகைகள் (அகத்திக் கீரை மட்டும் செய்யலாம்)

உருளைக்கிழங்கு

பீன்ஸ்

கேரட்

பீட்ரூட்

வெண்டைக்காய்

கத்தரிக்காய்

ப்ரொக்கோலி

பட்டாணி

காலிஃபிளவர்

வெங்காயம்

பெருங்காயம்

தக்காளி

பூண்டு

முருங்கைக்காய்

சுரைக்காய்

கோவக்காய்

சௌ சௌ

பச்சை மிளகாய்

இவை அனைத்தும் அமாவாசைக்குப் பயன்படுத்தக் கூடாத காய்கறிகள் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்