Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தை அமாவாசை 2023: வாழைக்காய் கறி செய்வது எப்படி? | Vazhakkai Curry Recipe

Gowthami Subramani Updated:
தை அமாவாசை 2023: வாழைக்காய் கறி செய்வது எப்படி? | Vazhakkai Curry RecipeRepresentative Image.

வாழைக்காயைக் கொண்டு ஏராளமான ரெசிபிக்கள் செய்யலாம். அதாவது வாழைக்காய் பொறியல், வாழைக்காய் கறி, வாழைக்காய் கட்லெட் என பல்வேறு விதமான ரெசிபிகள் வாழைக்காயைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதில், சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தை அமாவாசை 2023: வாழைக்காய் கறி செய்வது எப்படி? | Vazhakkai Curry RecipeRepresentative Image

வாழைக்காய் ரெசிபி

தை அமாவாசை தினத்தன்று, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து, அவர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படையலிட்டு வழிபடுவர். அதன் படி, முன்னோர்களுக்கு உணவுப் பொருள்கள் படைப்பதில் அதில் சில விதிமுறைகள் உள்ளன். அந்த வகையில், அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய உணவில் சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்கக் கூடாத காய்கறிகள் பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும். அந்த வகையில், அமாவாசை தினத்தில் உணவில் சேர்க்க வேண்டியவற்றுள் வாழைக்காயும் அடங்கும். ஏனெனில் முன்னோர்களின் தரும் அருளால், நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயைத் தவறாமல் சமைப்பார்கள்.

தை அமாவாசை 2023: வாழைக்காய் கறி செய்வது எப்படி? | Vazhakkai Curry RecipeRepresentative Image

செய்யத் தேவையான பொருள்கள்

வாழைக்காய் – 4

மஞ்சள் பொடி – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

உளுத்தம் பருப்பு

கறிவேப்பிலை – 1 கொத்து

தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பொடி செய்வதற்கு

கொத்தமல்லி விதை – 3 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்

கடலை பருப்பு – 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 5

எண்ணெய் – 2 டீஸ்பூன்

பெருங்காய கட்டி – சிறிய துண்டு

தை அமாவாசை 2023: வாழைக்காய் கறி செய்வது எப்படி? | Vazhakkai Curry RecipeRepresentative Image

அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கறி செய்முறை

✤ வாணலி ஒன்றை எடுத்து, அதில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

✤ எண்ணெய் காய்ந்தவுடன், பெருங்காயம், மல்லி விதை, மிளகாய் வற்றல், கடலை பருப்பு போன்றவற்றைச் சேர்த்து சிவக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ இதில், தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிளறிக் கொண்டு இறக்கி விடலாம். இந்தக் கலவை ஆறிய பிறகு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.

✤ பின்பு, வாழைக்காயை எடுத்து அதன் தோலை நீக்கி சிறிது பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

✤ அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி போன்றவற்றைச் சேர்த்து வாழைக்காயைப் போட வேண்டும்.

✤ இது வெந்தவுடன், நீரை வடிகட்டி கொட்டவும். பிறகு மற்றொரு அடி கணமான வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

✤ இதனுடன், வேக வைக்கப்பட்ட வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து பிரட்டவும்.

✤ பின் அடுப்பை மெதுவாக வைத்து, எரிய விட்டு 10 நிமிடம் வதங்கிய பிறகு, செய்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கலக்கவும். இவ்வாறு 3 அல்லது 4 நிமிடம் வதங்கிய பிறகு இறக்கி விடலாம். இப்போது சுவையான வாழைக்காய் கறி தயார் நிலையில் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்