Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மென்மையான மற்றும் அடர்த்தியான முடி வளர, அரிசி கஞ்சியை இப்படி பயன்படுத்துங்க.!| Arisi Kanji for Hair

Gowthami Subramani Updated:
மென்மையான மற்றும் அடர்த்தியான முடி வளர, அரிசி கஞ்சியை இப்படி பயன்படுத்துங்க.!| Arisi Kanji for HairRepresentative Image.

பெண்கள் தங்களது முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு, பல்வேறு வேதிப்பொருள்கள் கலந்த ஷாம்புக்கள், கிரீம் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதனை நீண்ட காலம் உபயோகிக்கும் போது, நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன. இது போன்ற கடைகளில் விற்பனை செய்யப்படும் வேதிப்பொருள்கள் கலந்த மருந்துகளைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, நல்ல இயற்கையான முறையில் வீட்டிலேயே செய்யக் கூடிய வகையில் தயாரித்து முகப் பொலிவு மற்றும் முடி பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம். அந்த வகையில், முடி பாதுகாப்பிற்கு அரிசி கஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காணலாம்.

மென்மையான மற்றும் அடர்த்தியான முடி வளர, அரிசி கஞ்சியை இப்படி பயன்படுத்துங்க.!| Arisi Kanji for HairRepresentative Image

அரிசி கஞ்சி

அரிசி கஞ்சியா? அப்படினா என்ன? எந்த கடையில் விற்கும்? இது போன்ற கேள்விகள் தான் தற்போதைய தலைமுறையினர் கேட்கக் கூடிய காலமாக உள்ளது. நாம் உண்பதற்கு செய்யும் சாதம் வடித்த கஞ்சியைத் தான் அரிசி கஞ்சி என அழைக்கிறோம். இதனை தலைக்குப் பயன்படுத்துவதன் மூலம், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதற்கு, அதில் இயற்கையாகவே உள்ள சத்துக்கள் ஆகும். இந்த அரிசி கஞ்சி ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு நாள் தலைக்குப் போட்டு வந்தால், தலைமுடி வளராத இடத்தில் புதிதாக முடி வளர்வதை நம்மால் பார்க்க முடியும்.

மென்மையான மற்றும் அடர்த்தியான முடி வளர, அரிசி கஞ்சியை இப்படி பயன்படுத்துங்க.!| Arisi Kanji for HairRepresentative Image

அரிசி கஞ்சி தலைக்கு பயன்படுத்துவது எப்படி

பொதுவாக, காலை அல்லது மதியம் வடிப்பவர்களாக இருந்தால், அந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை அப்படியே பயன்படுத்தலாம். இல்லையெனில், அதனை ஒரு நாள் புளிக்க வைத்து, அடுத்த நாள் பயன்படுத்தலாம். இது நல்ல பலனைக் கொடுக்கும்.

✤ முதலில் வைத்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ பிறகு தனியாக, 2 கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை எடுத்து அதனை நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

✤ பின், அதனை வடிகட்டி சாறு தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ இந்த சாறை அரிசி வடித்து வைத்திருக்கும் கஞ்சி தண்ணீரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✤ இவ்வாறு செய்யும் போது, அடர் பச்சை நிறத்தில் ஹேர் பேக் ஒன்று நமக்கு கிடைத்திருக்கும்.

மென்மையான மற்றும் அடர்த்தியான முடி வளர, அரிசி கஞ்சியை இப்படி பயன்படுத்துங்க.!| Arisi Kanji for HairRepresentative Image

தலைமுடிக்கு அரிசி கஞ்சியைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

✤ இவ்வாறு செய்து வைத்திருந்த ஃபேஸ் பேக்கை தலையில் சுலபமாக அப்ளை செய்து கொள்ளலாம்.

✤ இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பு தலைமுடிக்கு எண்ணெய் வைத்து நன்றாக சீவி சிக்கு இல்லாதவாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ அதன் பின், 20 நிமிடங்கள் கழித்து, தலைமுடிக்கு மைல்டான ஷாம்பு போட்டு தலையை நன்றாக அலசி விட வேண்டும்.

✤ அதன் பிறகு, உங்கள் முடி வறண்டு இல்லாமல், மென்மையாகவும், அடர்த்தியாகவும் வளர தொடங்கி விடும்.

இந்த அரிசி கஞ்சியுடன், கீரை சேர்த்துக் கொள்வது இன்னும் அதிக சத்துக்களைத் தரும். இத்துடன் உணவிலும் முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்வது மிக நல்லது. மேலும், கருவேப்பிலை பொடி, சட்னி செய்து சாப்பிட்டு வர, முடி உதிர்தல் அறவே குறைந்து, நீண்ட முடி வளர்ச்சியைப் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்