Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இப்படி பண்ணுங்க.. ஈஸியா மெகந்திய ரிமூவ் பண்ணிடலாம்| Easy Way to Remove Mehndi From Hands

Gowthami Subramani Updated:
இப்படி பண்ணுங்க.. ஈஸியா மெகந்திய ரிமூவ் பண்ணிடலாம்| Easy Way to Remove Mehndi From HandsRepresentative Image.

எந்தவொரு பண்டிகை என்றாலும், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது என்ன ஆடை உடுத்தலாம்? எப்படி மேக்கப் போட்டு கொள்ளலாம்? என்பது தான். மேக்கப்பை பொறுத்த வரை எத்தனையோ டிப்ஸ்கள் உள்ளன. அந்த வகையில் நம் கையில் போடும் மருதாணி அல்லது மெஹந்தியும் ஒன்று. மருதாணியைப் பயன்படுத்தினால், அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

இதனால், இன்ஸ்டன்ட் ஆக கைகளில் மருதாணி போட்ட உடனே சிவக்க வேண்டும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு உள்ளேயே இந்த வேலையை செய்ய வேண்டும் எனில் அதற்கு மெஹந்தி உதவும். ஆனால், கைகளில் மெஹந்தி போட்ட பின், சில காரணங்களுக்காக மெஹந்தியை அழிக்க வேண்டும் என நினைப்பர். அதன் படி, இந்தப் பதிவில் மெஹந்தியை எளிதாக எப்படி அழிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

இப்படி பண்ணுங்க.. ஈஸியா மெகந்திய ரிமூவ் பண்ணிடலாம்| Easy Way to Remove Mehndi From HandsRepresentative Image

மெஹந்தி அழிக்க டிப்ஸ்

கைகளில் வைத்த மெஹந்தியை அழிக்கும் சில டிப்ஸ்களைக் காண்போம்.

✤ கையில் வைத்த மெஹந்தியை அழிக்க ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்டிருக்கும் சோப்புகளைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவி வந்தால் சில நாள்களிலேயே மெஹந்தி மறைந்து விடும்.

✤ கைகளில் உள்ள கறைகளை நீக்குவதற்கு உப்பு சிறந்த காரணியாகும். கல் உப்பை நீரில் கரைத்து, அதில் 15 நிமிடங்கள் வர ஊற வைத்து பின் கையைத் தேய்த்தால் கறை நீங்கும். கையில் கறை நீங்கும் வரை தினமும் இப்படி செய்யலாம்.

✤ ஸ்கிரப்பர் வைத்து கறையை நீக்க முடியும். ஸ்கிரப் செய்வதற்கு முன்பு, கைகளை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின், முகத்திற்கு அப்ளை செய்யும் ஸ்கிரப்பரை வைத்து தேய்த்து கறையை நீக்கலாம்.

இப்படி பண்ணுங்க.. ஈஸியா மெகந்திய ரிமூவ் பண்ணிடலாம்| Easy Way to Remove Mehndi From HandsRepresentative Image

✤ ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதில் கல் உப்பு கரைத்து, அந்த எண்ணெயை பஞ்சு மூலம் கையில் தொட்டு தடவலாம். இவ்வாறு தடவி, 20 நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவி பிறகு ஸ்கிரப் கிரீம் கொண்டு கைகளை கழுவினால், மெஹந்தி கரை நீங்கி விடும்.

✤ எலுமிச்சைச் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் கரையை நீக்கும் தன்மை கொண்டது. இதனை கைகளில் நேரடியாகவோ அல்லது தண்ணீரில் பிழிந்து அந்த தண்ணீரையோ கைகளில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவினால் கரை நீங்கி விடும்.

பேக்கிங் சோடா கறைகளை நீக்க பெரிதும் உதவக்கூடியதாக அமைகிறது. இந்த பேக்கிங் சோடாவுடன், அரை மூடி அளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இதனை மெஹந்தி உள்ள இடங்களில் இந்த பேக்-கை அப்ளை செய்து 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு சோப்பு கொண்டு வெது வெதுப்பான நீரில் கைகளைக் கழுவினால் கறைகள் நீங்குவதைக் காணலாம்.

✤ நகங்களில் படிந்திருக்கக் கூடிய மெஹந்தி கரையை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் போதுமானதாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்