Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 நிமிடத்தில் சூப்பரான அவல் பாயாசம் செய்வது எப்படி?| Aval Payasam Seivathu Eppadi

Gowthami Subramani Updated:
10 நிமிடத்தில் சூப்பரான அவல் பாயாசம் செய்வது எப்படி?| Aval Payasam Seivathu EppadiRepresentative Image.

அவலைப் பயன்படுத்தி, புட்டு, உப்புமா போன்றவற்றைச் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், அவலில் சூப்பரான சுவையான அவல் பாயாசம் செய்யலாம். பண்டிகைக் காலங்களில் இது போன்ற சுவையான இனிப்பு பாயாசத்தை வழங்கலாம். மேலும், இந்த பாயாசம் செய்வது மிகவும் சுலபமாகும். இந்த சுவையான அவல் பாயாசத்தை இந்த புத்தாண்டில் செய்து மகிழுங்கள்.

10 நிமிடத்தில் சூப்பரான அவல் பாயாசம் செய்வது எப்படி?| Aval Payasam Seivathu EppadiRepresentative Image

தேவையான பொருள்கள்

கெட்டி அவல் – ½ கப்

பால் – 2 கப்

ஏலக்காய் – 1

வெல்லம் – ¼ கப்

நெய் – 2 தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 5

உப்பு – ஒரு சிட்டிகை

10 நிமிடத்தில் சூப்பரான அவல் பாயாசம் செய்வது எப்படி?| Aval Payasam Seivathu EppadiRepresentative Image

செய்முறை

✤ முதலில், வாணலி ஒன்றை எடுத்து, அதில் நெய்யை ஊற்றி முந்திரியைப் பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.

✤ பின் அதனைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ அதே நெய்யில் அவலைப் போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்க வேண்டும்.

✤ பிறகு ஒரு கனமான பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக கொதித்து சுண்டி வரும் போது, வறுத்து எடுத்த அவல், சேர்த்து, உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மிதமான தீயில் பால் ஊற்றி, அவல் நன்றாக வேகும் வரை வைக்க வேண்டும்.

✤ அதன் பின், அரை கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு சூடு செய்ய வேண்டும். வெல்லம் கரைந்த பின், அதனை வடிகட்டி வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

✤ இதனுடன் முந்திரி, ஏலக்காய் சேர்த்து கலந்து இறக்கி விடவும். வெல்லம் சேர்த்த பின், 1 நிமிடத்தில் பாயாசத்தை இறக்கி விடலாம். கொதிக்க வைக்க வேண்டாம்.

இப்போது சூப்பரான அவல் பாயாசம் தயார். இதனை சூடாகப் பரிமாறினால், வேற லெவல் ருசியைத் தரும். இது போன்று, அவல் பாயாசத்தை உங்கள் வீட்டிலேயே தயார் செய்து உண்டு மகிழுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்