Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5 மாதத்தில் கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | Baby Development in 5 Months Pregnant

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5 மாதத்தில் கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | Baby Development in 5 Months PregnantRepresentative Image.

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. 

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5 மாதத்தில் கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | Baby Development in 5 Months PregnantRepresentative Image

இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. சரி, உங்க இளவரசனோ இளவரசியோ 5வது மாதத்தில் எவ்வளவு எடை இருப்பார்கள், அவர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க. 

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5 மாதத்தில் கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | Baby Development in 5 Months PregnantRepresentative Image

குழந்தையின் வளர்ச்சி:

இந்த மாதத்தில் உங்க குழந்தை வயிற்றை உதைப்பதை உணரமுடியும். அதுமட்டுமல்லாமல், இந்த கட்டத்தில் குழந்தையின் தசைகள் மற்றும் எலும்புகள் அடர்த்தியாகிவிடும், மேலும் கைகள், கால்கள், விரல்கள் மற்றும் கால்விரல்கள் முழு வளர்ச்சியை பெற்றிருக்கும். 

கர்ப்பகாலத்தில் 5 வது மாதத்தில் குழந்தையின் மூளை இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல்பட தொடங்கும். அதோடு குழந்தையின் உடல் தோலும் கடினத்தன்மை பெற்றிருக்கும். 

அதேபோல், இந்த மாதத்தில் உங்க குழந்தைக்கு புருவங்கள், இமைகள், முடி, காதுகள் மற்றும் நகங்கள் உருவாகத் தொடங்கும். 

குழந்தை தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியும் இந்த மாதத்தில் தான் உருவாகும். மேலும், உங்க குழந்தையின் அழகிய கைகளில் கைரேகைகளும் உருவாகிவிடும். 

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5 மாதத்தில் கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | Baby Development in 5 Months PregnantRepresentative Image

5 மாத கருவின் அளவு:

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் உங்க குழந்தையின் வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. அதாவது, உங்க குழந்தை 140 முதல் 300 கிராம் எடையும், 13 - 25.6 அங்குல நீளமும் கொண்டிருக்கும். 

குழந்தையின் அசைவு:

கர்ப்பத்தின் 5வது மாதத்தில் உங்க குழந்தை அதோடு கட்டை விரலை உறிஞ்சுவது, உங்க வயிற்றில் அங்கும் இங்கும் நகர்வது, கொட்டாவி விடுவது, கண்களை சிமிட்டுவது போன்றவற்றை செய்யும்.

அதேபோல், நாம் வெளியில் எதையாவது செய்தால் அதற்கு எப்படி பதிலளிக்கவும் செய்யும். உதாரணமாக, நீங்க உங்க வயிற்றின் மீது கைகளை வைத்து லேசாக தட்டி பாருங்கள். உங்க குழந்தை கருப்பையில் இருந்து அசைவுகளை காண்பிக்கும்.

இந்த மாதத்தில் உங்க குழந்தை செவித்திறன் கேட்க தொடங்கும். இதனால், வெளி சத்தங்களை குழந்தையால் கேட்க முடியும். அதற்காக தான், இந்த காலக்கட்டத்தில் கெட்ட வார்த்தைகள், குழந்தையை பாதிக்கும் வார்த்தைகளை தவிர்த்துவிட்டு, நல்லதை கேட்கவும், பேசவும் சொல்கிறார். 

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்