Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy Helpful

Gowthami Subramani Updated:
கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy HelpfulRepresentative Image.

பொதுவாக, கருத்தரிப்பு காலங்களில் பெண்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. கருத்தரிப்பு காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு எதாவது ஆபத்து நேரிடுமோ என்ற கேள்வியும் எழும். இது குறித்த விரிவான தகவல்களைப் பற்றி இதில் காணலாம்.
 

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy HelpfulRepresentative Image

கர்ப்ப காலத்தில்

பெண்கள் சாதாரண நேரத்தில் இருப்பதை விட, கர்ப்ப காலத்தில் அதிக அளவிலான பாதுகாப்புடன் இருத்தல் வேண்டும். குறிப்பாக, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம். அதே போல, கர்ப்ப காலத்தில் சரியான உணவு எடுத்துக் கொள்வதும் அவசியமாகும். கர்ப்ப காலத்தில் குழந்தையைப் பாதிக்காத வகையில் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும். எதிலும் பொறுமையும், நிதானமும் அவசியம் வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சி தரும் செயல்களைக் கேட்கவோ, செய்யவோ கூடாது. இப்படி இருக்கும் போது உடலுறவை மேற்கொள்வது சரியா இல்லை தவறா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.
 

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy HelpfulRepresentative Image

கர்ப்ப காலத்தில் உடலுறவு

கரு வயிற்றில் இருக்கும் காலத்தில் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும் என்று அனைவருமே நினைத்துக் கொண்டிருப்பர். ஆனால் மகப்பேறு மருத்துவர்களின் அறிவுரைப்படி, இது முற்றிலும் தவறு எனக் கூறுகின்றனர். கருவுற்ற காலத்தில் உடலுறவு செய்வதால் குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. குழந்தை பனிக்குடத்தில் பாதுகாப்பாக வளரும். எனவே, உடலுறவில் பாதுகாப்பாக ஈடுபடலாம். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னரே மருத்துவரின் ஆலோசனையை ஏற்பதும் அவசியம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy HelpfulRepresentative Image

கருவுற்ற முதல் மூன்று மாதத்தில்

முதல் 10 வாரங்களிலேயே கருவுற்றதை உறுதி செய்வது அவசியம் ஆகும். இதில் உடலுறவைத் தவிர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

இந்த காலகட்டத்தில் கர்ப்பத்தின் உறுதி தன்மை குறைவாக இருக்கலாம்.

எனவே, உடலுக்கு அதிர்ச்சி தரும்படியாக, முரட்டுத்தனமாகவோ, வேகமாகவோ ஆண்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இதனால், கரு பாதிப்பு அடையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, முதல் மூன்று காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம், மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. பெரும்பாலும், உடல் உறவை பெண்கள் விரும்புவதில்லை.

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy HelpfulRepresentative Image

இந்த காரணங்களினால்

அதிக நேரமாக உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கருவுற்ற காலத்தில் வாந்தி, மயக்கம் என சோர்வுற்றிருக்கும் போது பெண்கள் சோர்வடைய வாய்ப்புண்டு.

அதே போல, உறவின் போது பெண்கள் அசௌகரியமான நிலையில் இருக்கக் கூடாது. ஆண்கள் தனது உடல் எடை முழுவதையும் பெண் மீது திணிக்கக் கூடாது.

அடிக்கடி கருச்சிதைவு, பலவீனமான உடல் உடைய பெண்கள் உடல் உறவைத் தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy HelpfulRepresentative Image

பயமில்லாமல் இருப்பது

பொதுவாக பெண்கள் கருவுற்ற தொடக்கத்தில் ஆரோக்கியத்தை நினைத்தே கவலையில் இருப்பர். அதே போல, உடலுறவு கொள்வதிலும் பயம் ஏற்படும். கருவுற்ற காலத்தில் உடலுறவு மேற்கொள்வது தவறில்லை. பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளும் போதே, இடுப்பெலும்பு தளரும் எனக் கூறுவர். இது சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும். எனினும், கர்ப்பிணிப் பெண்களின் மனநிலையைப் பொறுத்தே உறவு அமைய வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்