தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும்.
இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பத்தின் போது ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கும். இதனால், பல வகை உணவுகளை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், கர்ப்பத்தின் போது எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறோமோ, அந்த அளவிற்கு சில உணவுகளை தவிர்ப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், சில செயல்பாடுகளையும் இந்த மாதிரியான நேரத்தில் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
➤ உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆக்சிஜன் சப்ளையைக் குறைக்கும் என்பதால், அதிக உயரத்தில் (2,500 மீட்டருக்கு மேல்) உடற்பயிற்சி செய்யக் கூடாது.
➤ அதிகமாக காஃபின் உட்கொள்வது தவிர்க்கவும். ஏனென்றால், இது உங்கள் குழந்தையின் இதய துடிப்பை அதிகரிக்கும். சில சமயங்களில் கருச்சிதைவுக்கும் வழிவகுக்கலாம்.
➤ உங்களிடம் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் குப்பைகளை சுத்தம் செய்யாதீர்கள், ஏனெனில் அவற்றிலிருந்து ஒரு ஒட்டுண்ணியை நீங்கள் நுகரலாம். இதனால், குழந்தைக்கும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
➤ உங்கள் குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியடையத் தொடங்கும் போது குழந்தைக்கு ஏற்படும் எந்த சிறிய ஆபத்தும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். எனவே, ஓவியம் வரைவதையும் அலங்கரிப்பதையும் தவிர்ப்பது நல்லது.
➤ கர்ப்பக்காலம் முழுவதும் வாகனம் ஓட்டாமல் இருப்பது கூட நல்லது. குறிப்பாக, இருசக்கர வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
➤ அதிக வெப்ப சூழல் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், சூடான தண்ணீரில் உள்ள டப்பில் அல்லது சானாவில் உட்கார்ந்து குளிக்காதீர்கள். அதேபோல், சுடு தண்ணீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
➤ வெளியில் சமைத்த இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும், அது சுத்தம் செய்யப்பட்டு சரியாக சமைக்கப்பட்டதா என்று உங்களுக்குத் தெரியாது அல்லவா.
➤ எக்காரணத்திற்காகவும் மது அருந்தாதீர்கள், ஏனெனில் கருவில் கரு ஆல்கஹால் சிண்ட்ரோம் (fetal alcohol syndrome - FAS) உருவாக காரணமாகிவிடும்.
➤ புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் புகைப்பிடிப்பவர்களின் பக்கத்தில் நின்று சுவாசிப்பதையும் தவிர்க்க வேண்டும். இது குறைந்த எடையுடன் குழந்தை பெற்றெடுக்கவும், உடல் குறைபாடு உள்ள குழந்தை பெற்றெடுக்கவும் ஆபத்து உள்ளது.
➤ அதேபோல், முடிக்கும் டை அடிப்பதையும் தவிர்க்கவும். ஏனென்றால், டையில் இருக்கும் அதிக அளவு இரசாயனம் உங்களையும், உங்க குழந்தையையும் ஒரே நேரத்தில் பாதிக்கும்.
பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…