Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்.. அவற்றின் நன்மைகள் என்ன?

Nandhinipriya Ganeshan October 15, 2022 & 19:00 [IST]
மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்.. அவற்றின் நன்மைகள் என்ன?Representative Image.

பொதுவாக, பெண்கள் அதிகம் விரும்பி அணியும் ஆபரணங்களுள் மூக்குத்தியும் ஒன்று. ஒரு பெண்ணின் முக அழகை மெருகூட்டுவதே மூக்கு தான். அந்த மூக்கிற்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக மூக்குத்தி இருக்கிறது. பெண்கள் மூக்குத்தி குத்துவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் ஓர் சம்பிரதாயம். ஆனால், நம் முன்னோர்கள் கடைபிடிக்கும் ஒவ்வொரு பழக்கங்களின் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். அதுபோல தான் மூக்குத்தி குத்துவதன் பின்னாலும் பல காரணங்கள் மறைந்திருக்கின்றன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.

இந்த காலத்தில் பல பெண்கள் ஓட்டை போடாமல் ஃபேஷனுக்காக மூக்குத்து அணிந்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் ஓட்டை போட்டு மூக்குத்தி அணிவதே சிறந்தது. பொதுவாக, மூக்குத்தி தங்கம், வெள்ளி, பித்தளை என பல உலோகங்களாலும், ரத்தினக்கல், வைரக்கல் என பல வகையான கற்கள் பதிக்கப்பட்டும் செய்யப்படுகின்றன. ஆனால், தங்கத்தினால் செய்த்த மூக்குத்தி அணிவதே சிறந்தது. ஏனெனில், தங்கத்திற்கு உடலில் உள்ல வெப்பத்தினை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டது. 

மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்.. அவற்றின் நன்மைகள் என்ன?Representative Image

மூக்குத்தி குத்துவதால், உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறும். அதாவது, மூக்கின் மடல் பகுதியில் ஓட்டை போடும் போது அதன் வழியாக நரம்பு மண்டலங்களிலுள்ள கெட்ட வாயுக்கள் துவாரத்தின் வழியாக வெளியேறிவிடும். குறிப்பாக, பருவமடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் காணப்படும். அவை மூக்கு குத்தும்போது அகன்று விடுகிறது. நம் முன்னோர்கள் பெண்கள் பருவம் அடைந்தவுடன் மூக்கு குத்த சொல்லவதன் காரணமும் இது தான்.

மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்.. அவற்றின் நன்மைகள் என்ன?Representative Image

மேலும், மூக்குத்து அணிவதால் ஒற்றைத் தலைவலி பிரச்சனை வரதாது. சளி மற்றும் மூக்கு சம்பந்தமான பாதிப்புகள் குறைவதோடு, பார்வைக் கோளாறுகள் ஏற்படாதிருக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது. அடிக்கடி ஏற்படும் மனத்தடுமாற்றத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். பொதுவாக மூக்கு குத்தும்போது வலதுபுறமா அல்லது இடதுபுறமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். 

மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்.. அவற்றின் நன்மைகள் என்ன?Representative Image

வலது பக்கம் மூக்கு குத்தினால், இடது பக்க மூளையின் இயக்கம் சீராகயிருக்கும். அதேபோல், இடது பக்கம் குத்தினால் வலது பக்க மூறை சீராகயிருக்கும். இந்த பிரச்சனையே வேண்டாம் என்பதற்காக அந்த காலத்து பெண்கள் இரண்டு பக்கமும் குத்திக்கொள்வார்கள். அதனால், அவர்கள் நீண்ட நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இந்த காலத்தில் ஒரு பக்கம் குத்துவதே சந்தேகம் தான். அதுவும் ஃபேஷனுக்காக தான் குத்துக்கொள்கிறார்கள். சரி, அப்படியாவது குத்துக்கொள்கிறார்களே என்று சந்தோஷபட்டுக் கொள்ள வேண்டியது.

மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்.. அவற்றின் நன்மைகள் என்ன?Representative Image

அந்த ஒரு பக்கமும் இடது பக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், பெண்கள் இடது பக்கம் மூக்குத்தி அணிவதால் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் பிரசவக் காலத்தில் ஏற்படும் வலி குறையும். இதற்கு காரணம் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இடது பக்க மூக்கோடு தொடர்புடையது. எனவே, ஃபேஷனுக்காக முக்குத்தி அணிந்துக் கொண்டாலும் இடது பக்கமாக அணிந்துக்கொள்ளுங்கள் பெண்களே. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்