Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

கொலுசு போடுவதால் இத்தனை நன்மைகளா?| Benefits of Wearing Kolusu

Gowthami Subramani Updated:
கொலுசு போடுவதால் இத்தனை நன்மைகளா?| Benefits of Wearing KolusuRepresentative Image.

பொதுவாக பெண்கள் காதில் காதணி அணிய வேண்டும், கையில் வளையல் அணிய வேண்டும். காலில் கொலுசு அணிய வேண்டும் என கூறுவர். ஆனால், இந்த காலத்தில் ஸ்டைலிஷ் ஆக, இருக்க வேண்டும் என கையில் வளையல் போடாமல் காலில் கொலுசு அணியாமலும் இருக்கிறார்கள். நம் முன்னோர்கள் நம்மை செய்ய சொல்லும் ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்னால், ஆன்மீக ரீதியான மற்றும் அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. எனவே, முன்னோர்கள் சொல்வதை மதித்து, அதன் படி செய்வதன் மூலம், பல்வேறு பயன்களைப் பெறலாம். அந்த வகையில், இந்தப் பதிவில் கொலுசு போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

கொலுசு போடுவதால் இத்தனை நன்மைகளா?| Benefits of Wearing KolusuRepresentative Image

பெண்களுக்குப் பிடித்த கொலுசு

பெண்களுக்குப் பொதுவாக கொலுசு என்றாலே மிகவும் பிடித்தமான ஒன்றாகவே அமைகிறது. நடந்தால், காலில் இருந்து வரும் ஓசையைக் கேட்பதற்கே இனிமையாக இருக்கும். அதன் படி, பெண்கள் காலுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உள்ள கொலுசுகளைப் போட்டு வருகின்றனர். இதில், வெள்ளி நகைகள் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவைகளுள் ஒன்றாகும். இது நம் உடலில் உள்ள வெப்பத்தைத் தணித்து, உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதாக அமைகிறது.

கொலுசு போடுவதால் இத்தனை நன்மைகளா?| Benefits of Wearing KolusuRepresentative Image

காலில் கொலுசு அணிந்தால் கிடைக்கும் நன்மைகள்

✥ தமிழர்களின் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குவது காலில் கொலுசு அணிவதாகும். இது நம் உடலில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி, உடலின் உறுப்புகளைப் பராமரிப்பதற்கு உதவுகிறது.

✥ இதன் மூலம், நம் உடலில் உள்ள வெப்பம் குறைவதுடன், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம், நோய்கள் உண்டாவதைத் தடுப்பதிலும் உதவுகிறது.

✥ காலில் கொலுசு அணிவது, மாத விடாய்க் கோளாறுகளை சீர் செய்ய உதவுகிறது. இது பாதங்களில் அடிக்கடி வியர்வை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

✥ குதிகாலில் ஏற்படும் வலியை நீக்கவும், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் கொலுசு உதவுகிறது.

✥ ஆண்களை விட, பெண்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுவர். ஆனால், குதிகாலில் வெள்ளிக் கொலுசு நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால், குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லக் கூடிய உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.

✥ ஆண், பெண் என குழந்தைப் பருவத்தில் கொலுசுகளை அணிவிப்பது, அவர்கள் நடக்கும் போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதற்காகவும், குடும்பத்தினருக்கு குழந்தைகளின் அசைவு பற்றிக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது.

✥ இத்தகைய கொலுசு அணிவது பல்வேறு பயன்களைத் தருவது மட்டுமல்லாமல், பெண்களின் காலுக்கு அழகு தருபவையாகவும் அமைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்